Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 64 · 139 / 159

நல்ல தாய் நீயே!

வித்வ சிகாமணியாக விளங்கியவர் தேவக்கோட்டை சிந்நயச் செட்டியார். இவர் ஆறுமுக நாவலரை குருவாக கொண்டவர். காரைக்குடி வன்தொண்டர் செட்டியாரின் மாணவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என பல்வேறு கல்வியாளர்களாலும் பாரட்டப்பட்டவர். நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரையில் அமைய பாண்டித்துரை தேவருக்கு உறுதுணையாக இருந்தவர். அவரின் இனிய நண்பரும் கூட. இப்படிப்பட்ட புலவர்தான் சிந்நயச் செட்டியார். இவர் மதுரை மீனாட்சியம்மையின் மீது பதிகம் பாடியுள்ளார். இது படிப்பவர்களின் நெஞ்சை உருக்கும். கேட்பவரின் மனதை கரைக்கும் தன்மை கொண்டது. அதிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக...

நண் பற்றிடாது சேய்மேனியின் மலங்கழுவி நகைவகை அலங்கரித்து நாயகன் கரதலத்தம் மகவை நல்குவது நற்றாய்க்(கு) இயற்கை அன்றோ!

வெண்பத்து நான்கு நூறாயிரம் பேதவுய(ர்)
எல்லாம் ஒருங்கே நோவா
ஈன்ற நீ சிறுவனேன் உள்ளத்(து) அழுக்கொழிய
நின் கருணை நீரினால் ஆட்டிக்
கண்பற்று ஞானக்கலன் பூட்டி எனையகில
காரண பிதாவானவுன்
கணவர் தம்மடியில் வைத்து உவகை மேற்கொள்ளக்
கடைக்கணித்திடுதி யம்மே
வண்பட்டிடைக் கனகமாலை யம்கோகனக
மலர்வயினுதித்த மணியே
மகிமைசேர் மாட்சியர்கண் மகிழ்வே காட்சி தரு(ம்)
மதுரை மீனாட்சியுமையே.

Advertisement
Top
Advertisement