Meenakshi Amman Temple

Special supplement · Part 1 · page 28 · 21 / 159

யானை மீது அன்னை

‘அவுதா சப்பரம்’ அல்லது ‘ஹவ்தா’என்பது யானையின் மீது அரசர்கள் அல்லது தெய்வங்கள் பவனி வரும் சிம்மாசனம் போன்ற அமைப்பு. இதை தமிழில் ‘அம்பாரி’ என்பர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை மாதத்தில் தைப்பூசத் தெப்பத் திருவிழா பத்து நாள் விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த தைப்பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சுவாமியும், அம்மனும் அவுதா சப்பரத்தில் எழுந்தருள்வர். மாசி வீதிகள், சிந்தாமணி, அனுப்பானடி போன்ற முக்கியப் பகுதிகளில் இந்த சப்பரத்தை தரிசிக்கலாம். தைப்பூசத்தன்று இரவு மிதவை தெப்பத்தில் குளத்திற்குள் சுற்றிய பின் தெப்பக்குளத்தை வலம் வருவர்.

Advertisement
Advertisement
Top
Advertisement