Special supplement · Part 1 · page 25 · 3 / 159
இந்திரனின் பூஜை
மதுரையில் சிவபெருமான், அறுபத்து மூன்று திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திரு விளையாடல் சித்ரா பவுர்ணமியின் போது நடக்கிறது. அன்று உச்சிக்காலத்தில் சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம். மீனாட்சி அம்மன் சன்னதி எதிரே பிரதான வாசலில் கோபுரம் கிடையாது. அஷ்ட சக்தி மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் இருபுறமும் தூண்களில் கவுமாரி, ரவுத்ரி, வைஷ்ணவி, லட்சுமி, யக்ஞா ரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டு அம்பிகையர் இருக்கின்றனர். இம்மண்டபத்தின் மேல் விதானத்தில் சிவன், மீனாட்சி அரசாட்சி புரிந்த சிற்பங்களும், பட்டாபிஷேகம், திக் விஜய காட்சிகளும் உள்ளன.