Special supplement · Part 2 · page 35 · 58 / 159
முதல் பூஜை
மீனாட்சியம்மன் கோயிலில் தினமும் முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு பூஜை நடக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இக்கோயிலில் அம்பிகை பதிவிரதையாக எப்போதும் தன் கணவனையே எண்ணிக் கொண்டிருக்கிறாள். திருமணமான பெண்கள் கணவர் எழும் முன்பாகவே எழுந்து நீராடி பின் கணவரை எழுப்ப வேண்டும் என்பர். இதை வலியுறுத்தும் விதமாக இங்கு மீனாட்சி தன் கணவருக்கு முன்பே குளித்து (அபிஷேகம் செய்யப்பட்டு) தயாராகிறாள். இதன் அடிப்படையில் காலையில் மீனாட்சிக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு அபிஷேகம், பூஜை நடக்கிறது.