Special supplement · Part 2 · page 40 · 71 / 159
பாட்டும் நானே...
மதுரையை வரகுண பாண்டியன் ஆட்சி செய்தபோது பாணபத்திரர் என்ற சிவபக்தர் வாழ்ந்து வந்தார். யாழ் வாசிப்பதில் வல்லவரான பாணபத்திரர் தினமும் சொக்கநாதர் சன்னதியில் இசைபாடுவது வழக்கம். தன் பக்தனின் பெருமையை உலகுக்கு தெரியப்படுத்த விரும்பினார் சிவபெருமான். ஒருநாள் இசையில் சிறந்தவரான ஏமநாதன் என்பவர் மதுரைக்கு வந்து யாழ் மீட்டினார். இதைக்கேட்டு மகிழ்ந்த வரகுண பாண்டியன் பாணபத்திரருக்கும், ஏமநாதருக்கும் போட்டி நடத்த விரும்பினார். ஏமநாதரோ ‘தன்னை விட இசையில் சிறந்தவர் யாருமில்லை’ என கர்வம் கொண்டார். இதைப்போக்க சிவபெருமான் ஒரு விறகு வெட்டியின் கோலத்தில் வந்து யாழ் மீட்டினார். அதோடு தான் பாணபத்திரரின் சீடர் எனவும் சொல்லிவிட்டு சென்றார். இதைக்கேட்ட ஏமநாதன் தலைகுனிந்தார். இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் மீனாட்சியம்மன் விறகு விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி தருவாள். இந்தக்கோலத்தை தரிசித்தால் மனதில் கர்வம் என்பதே வராது.