Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 48 · 99 / 159

திருப்பணி செய்தவர்கள்

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு
சக ஆண்டு வாரியாக
திருப்பணி செய்தவர்களின்
பட்டியலைத் தருகிறது
திருப்பணி மாலை என்னும் நூல்.

  1. சுவாமியின் அஷ்டகஜ விமானத்தை தேவலோக இந்திரன் பிரதிஷ்டை செய்தார்.
  2. சுவாமி கோயில் அர்த்தமண்டபம், மணிமண்டபம், மகாமண்டபம், ஆறுகாற்பீடம், சன்னதிக் கோபுரம், மூலபிராகாரத் திருமதில்களும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், நாயகர் கோயில், சூரியாதி சண்டேசுவர தேவதை பிரகாரத் திருமதில், கோட்டை அகழி, கோட்டைக்கு வெளியில் ஐயனார் கோயில், தெற்கு திசையில் சப்த மாதர்கள் கோயில், விநாயகர் கோயில், மேற்குத் திசையில் ருத்திரன் கோயில், வடக்கு திசையில் எட்டு தோள்களை உடைய காளி கோயிலை குலசேகர பாண்டியன் பிரதிஷ்டை செய்தார்.
  3. சித்தர்கோயிலை விக்கிரம பாண்டியன் பிரதிஷ்டை செய்தார்.
  4. சுவாமி கோயிலின் இரண்டாம் பிராகாரத் திருமதிலும், ஒன்பது நிலைப் பெரிய கோபுரமும், அம்மன் சன்னதி கோயில் இரண்டாம் பிராகாரத் திருமதிலும், சன்னதி மண்டபமும் சுந்தரபாண்டியன் செய்தவை. 1140
  5. அம்மன் சன்னதி மூன்று நிலைக் கோபுரம், ஆனந்த தாண்டவநம்பி செய்தது. 1150
  6. மாடவீதியாகிய ஆடிவீதப் பெரிய திருமதில் திருநோக்கழகியார் செய்தது. 1506
  7. ஆடிவீதி மேற்கு ஒன்பது நிலைப் பெரிய கோபுரம் பராக்கிரம பாண்டியன் செய்தது. 1245
  8. சுவாமி சன்னிதி அஞ்சுநிலைக் கோபுரம் வசுவப்பன் செய்தது. 1294
  9. மேற்படி கோவிலில் இரண்டாம் பிரகாரம் மேற்புறம் ஐந்து நிலைக்கோபுரம் செய்தது மல்லப்பன் 1294
  10. அம்மன் கோவில் முதற்பிரகாரச்சுற்று மண்டபமும் பள்ளியறையும், ஆறுகாற்பீடமும் நாயகர் சன்னதி மண்டபமும் மாவலி செய்தது 1374
  11. மண்டப நாயகமும் சின்னீச்சுரமும் சின்னப்பன் செய்தது 1448
  12. சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரம் தெற்கு ஐந்துநிலைக் கோபுரம் செவ்வந்தி மூர்த்தி செய்தது 1481
  13. மேற்படி பிரகார வடக்கு ஐந்துநிலைக் கோபுரம் செவ்வந்தி வேலன் செய்தது. 1482
  14. ஆடிவீதித் தெற்கு ஒன்பது நிலைக் கோபுரம் சிராமலைச் செவ்வந்தி செய்தது. 1400
  15. சுவாமி சன்னதியில் துவாரபாலகர் மண்டபம் பொற்றாமரை வட புற மண்டபம், பெருமாள் செய்தது. 1484
  16. அம்மன் சன்னதிச்சங்கிலி மண்டபம், திருவம்பலச் செட்டி செய்தது. 1484
  17. சுவாமி கோவில் முதற்பிராகாரக் கீழ்புறத் தென்புறம் மண்டபங்கள். 1485
  18. அம்மன் கோவில் இரண்டாம் பிரகாரக்கீழ்புற மண்டபம், பொற்றாமரை மேற்புற மண்டபம் செட்டியப்பன் செய்தது
  19. வன்னியடிச்சபை, செல்லப்பன் செய்தது 1485
  20. சங்கிலி மண்டபத்திற்கு தெற்கு மண்டபம், திம்மப்ப நாயகன் செய்தது. 1486
  21. செவ்வந்தீசுரம் செவ்வந்தி செய்தது 1486
  22. சுவாமி கோவில் முதற்பிராகார வடபுற மண்டபம் பட்டுத்திருமலை நாயக்கர் செய்தது. 1491
  23. அம்மன் கோவில் இரண்டாம் பிரகார மேற்புற வட புற மண்டபங்கள், வீர கிருஷ்ணன் செய்தது 1491
  24. அறுபத்து மூவர் கோவில் மண்டபம், நயினாமுதலியார் செய்தது. 1491
  25. சன்னதி ஏழுநிலைக் கோபுரம் காளத்தி முதலியார் செய்தது 1492
  26. அம்மன் கோயில் இரண்டாம் பிராகார மேற்கு ஐந்து நிலைக் கோபுரம் வீரத்தும்மச்சி செய்தது 1492
  27. சுவாமி சன்னதி துவஜஸ்தம்ப மண்டபம் இரண்டாம் பிரகார சுற்று மண்டபம் சம்பந்தர் கோவில் மண்டபம், ஆடி வீதி வடக்கு ஒன்பது நிலைக் கோபுரம் மடைப்பள்ளி கிருஷ்ண வீரப்ப நாயக்கர் செய்தது. 1494
  28. பொற்றாமரைக் கீழ்புற மண்டபமும், திருமதிற்படியும் குப்பையாண்டி செய்தது 1495
  29. செவ்வந்தீசுரச்சுற்றுத் திருமதில் சன்னதி மண்டபம், சின்னச் செவ்வந்தி செய்தது 1496
  30. பொற்றாமரை தென்புற மண்டபமும், படியும், திருமதிலும் விசுவநாதர் பிரதிஷ்டையும் அப்பன் பிள்ளை செய்தது 1500
  31. சொக்கநாதர் மண்டபம் வீரப்பன், வீரய்யன் செய்தது 1500
  32. சுவாமி கோவில் இரண்டாம் பிராகார நிருதி மூலை மண்டபம், விருப்பணன் செய்தது 1510
  33. வீரசந்தராய மண்டபம், முத்துவீரப்ப நாயக்கர் செய்தது. 1533
  34. அம்மன் சன்னதி முதலிப்பிள்ளை மண்டபம், கடந்தை முதலியார் செய்தது
  35. மீனாட்சி நாயக்கர் மண்டபம் 1630
  36. கலியாண மண்டபம் விஜய ரெங்க சொக்க நாதர் நாயக்கர் செய்தது 1633
  37. பேச்சுக்கால் மண்டபம் பிட்டுச் சொக்கப்பண்டாரம் செய்தது 1580
  38. ஆடிவீதி நிருதி மூல மண்டபம் தும்மச்சி நாயக்கர் செய்தது 1680
  39. ஆடிவீதி அக்கினி மூல மண்டபம் ஆறுமுக முதலியார் செய்தது 1682
  40. ஆடி வீதி ஈசான மூலை தட்டுச் சுற்று மண்டபம் வேங்கடசுவர முதலியார் செய்தது. 1694
  41. சேர்வைக்காரர் மண்டபம் மருதப்ப சேர்வைக்காரர்
Advertisement
Advertisement
Top
Advertisement