Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி
  ஊர்: நங்கநல்லூர்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி, மாசி மாதத்தில் நடைபெறும் சூரிய வழிபாடு  
     
 தல சிறப்பு:
     
  மாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை சுமார் ஆறு மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது பாய்ச்சி ஜொலிக்கச் செய்யும் அற்புதம் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது. ஈஸ்வரனுக்கு எப்படி சண்டிகேஸ்வரர் இருக்கின்றாரோ அதுபோல சண்டிகேஸ்வரி சன்னதியும் இங்கு காண்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில், நேரு காலனி, பழவந்தாங்கல் நங்கநல்லூர், சென்னை.  
   
போன்:
   
  +91 93821 20248 
    
 பொது தகவல்:
     
  பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரி உள்ளனர். கோயில் முன்புறத்தில் ராஜேஸ்வரி அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்க, அவருக்கு இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் உள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், கல்விச் செல்வத்துடன் பொருட் செல்வமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  இத்திருக்கோயிலில் ஸ்ரீராஜராஜேஸ்வரி ஒரு சிறுமி வடிவத்தில் காட்சிக் கொடுப்பது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். மேலும் மாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை சுமார் ஆறு மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது பாய்ச்சி ஜொலிக்கச் செய்யும் அற்புதமும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றதாம். இதன் காரணமாக சூரிய வழிபாடு என்ற நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. வேறு எந்த அம்பாள் தலத்திலும் காண்பதற்கரிய காட்சியாக ஈஸ்வரனுக்கு எப்படி சண்டிகேஸ்வரர் இருக்கின்றாரோ அதுபோல சண்டிகேஸ்வரி சன்னதியும் இங்கு காண்பது விந்தையாகும்.  
     
  தல வரலாறு:
     
  பல வருடங்களுக்கு முன்பாக காஞ்சி பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு தனது பக்தர்கள் புடைசூழ பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும், திரிபுரசுந்தரியையும் தரிசித்து விட்டு வந்துகொண்டிருக்கும்போது பழவந்தாங்கலில் (தற்போது கோவில் அமைந்திருக்கும் பகுதி வழியாக) வந்து கொண்டிருக்கும்போது சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராய் ஒரு அரசமரத்தடியில் தங்கினார். உடன் வந்த பக்தர்கள் சற்று தள்ளி வேறு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக வேண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைக்க, அது அவர் காதில் விழவில்லை. சிறிது நேரத்தில் ஒரு சின்ன சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகாபெரியவர் முன்பாக வந்து இந்தாருங்கள் தண்ணீர் கேட்டீர்களே என்று கூறி கொடுத்தாளாம். அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு சிறுமியைக் காணவில்லை.

உடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தை கூறி, யார் அந்த சிறுமி ? தண்ணீரை நீங்கள்தான் சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா ? என்று கேட்க, அவர்களோ இல்லையே, அந்த சிறுமி யாரென்றே தெரியாது என்று வியப்புடன் கூறினார்களாம். மகாப் பெரியவர் சற்றே கண் மூடி அமர்ந்திருந்தாராம். வந்தது சாட்சாத் அந்த அகிலமெல்லாம் காக்கும் அம்பிகையான ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே என்பதை உண்ர்ந்தவராய் கிராம பெரியவர்களையும், ஊர் மக்களையும் அழைத்து இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள். உடனே தோண்டி கண்டுபிடியுங்கள் என்று சொல்லிவிட்டு மகாபெரியவர் ஸ்ரீநந்தீஸ்வரரை தரிசிக்கச் சென்று விட்டார்.

கிராமப் பெரியவர்கள் அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின் குழந்தை வடிவிலான விக்ரகமும், சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைக்கப் பெற்று மிகவும் மகிழ்வுற்று அதை ஜகத்குருவிடம் சென்று தெரிவித்தனர். பரம சந்தோஷம் அடைந்த பெரியவர் விக்ரகபிரதிஷ்ட்டை செய்து அம்பிகைக்கு ஸ்ரீ வித்யாராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்தை வைத்து வழிபட உத்தரவிட்டார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மாசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரிய பகவான் காலை சுமார் ஆறு மணி அளவில் தனது சூரியக் கதிர்களை அம்பிகையின் மீது பாய்ச்சி ஜொலிக்கச் செய்யும் அற்புதமும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது.
விஞ்ஞானம் அடிப்படையில்: ஈஸ்வரனுக்கு எப்படி சண்டிகேஸ்வரர் இருக்கின்றாரோ அதுபோல சண்டிகேஸ்வரி சன்னதியும் இங்கு காண்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar