தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது. ஆசியாவிலேயே மிக நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோயிலின் புஷ்ப பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணன்.
திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோயில்
வடக்கு மாசி வீதி, மதுரை.
பொது தகவல்:
இங்கு ஆஞ்சநேயர், ஹயக்ரீவர், காளியம்மன், பாமா ருக்மணியுடன் உற்சவர், நாகர் மற்றும் ராசி சக்கரம், யோக சக்கரம் போன்றவை அமைந்துள்ளது.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் பெற பக்தர்கள் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
கிருஷ்ணனுக்கு கொலுசு அணிவித்து, கோயிலில் தொட்டில் கட்டி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ள மாசி வீதிகளில், வடக்கு மாசி வீதியின் மையப் பகுதியில். சுமார் 100 ஆண்டுகளுக்குமுன் ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள், முழுக்க முழுக்க கல்கட்டுமானமாக கோயில் அமைந்திருப்பது சிறப்பு. மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் உள்ளதால், வடக்கு கிருஷ்ணன் கோயில் என்றும், ஆரம்ப காலத்தில் கம்பத்தின் அடியில் கிருஷ்ணன் வீற்றிருந்ததால் கம்பத்தடி கிருஷ்ணன் கோயில் என்றும் அழைக்கிறாõர்கள் பக்தர்கள். மாயனை மன்னு வடமதுரை மைந்தனை... எனப் போற்றுவாள் ஆண்டாள். இங்கே நம் தென்மதுரையில் இரண்டு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்திய கோலத்தில் அருள்கிறார் நவநீதகிருஷ்ணன் பாமா, ருக்மணி தேவியரும் உடனிருக்கிறார்கள். இவருக்கு ஒரு சிறப்பு உண்டு. குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று குழந்தைக்கு சோறூட்டுவதாக வேண்டிக்கொண்டு (அன்னப்ரசன்னம்) அங்கு செல்ல இயலாதவர்கள் இந்த நவநீதகிருஷ்ணன் சன்னிதியில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
அதுமட்டுமா? புத்திரதோஷம் உள்ளவர்கள் இந்தக் கிருஷ்ணனை மனதாரப் பிரார்த்தித்து, அவருக்கு கொலுசு அணிவிப்பதாகவும், கோயிலில் தொட்டில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் தினம் தினம் விசேஷம்தான் என்றாலும், கிருஷ்ண ஜெயந்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் முதல் நாள் கிருஷ்ணன் பிறப்பு உத்ஸவம். 2-ஆம் நாள் உறியடி வைபவம் அன்று தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது. ஆசியாவிலேயே மிக நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோயிலின் புஷ்ப பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணன்.
தல வரலாறு:
நவநீதம் என்றால் வெண்ணெய் என்று பொருள். வெண்ணெய்ப் பிரியன் என்பதால், கண்ணனை நவநீத கிருஷ்ணன் எனச் சிறப்பித்தார்கள் பெரியோர்கள். அதுமட்டுமா...? தன் மீதான பக்திப் பெருக்கில் ஊனும் உயிரும் உருகும் அடியவர்களுக்காக. தானும் வெண்ணெயாய் உருகும் பண்பினன் அல்லவா கண்ணன்! ஆகவே, அவனுக்கு நவநீத கிருஷ்ணன் எனும் பெயர் பொருத்தம்தான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது. ஆசியாவிலேயே மிக நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோயிலின் புஷ்ப பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணன்.