இக்கோயிலில் பரிவாரதெய்வங்களாக கருப்பணச்சாமி, பேச்சியம்மன், வீரபத்திரன், சப்பாணி,விநாயகர், குதிரை அய்யனார் சுவாமிகளுக்கு தனித்தனி சன்னிதானம் உள்ளது.
பிரார்த்தனை
நினைத்த காரியங்களாக திருமணம், குழந்தை வரம் கிட்டுதல், விவசாயம், தொழில் விருத்தி, சொத்து பிரித்தல், குடும்ப பிரச்னை அகலவும், நீண்ட கால நோய் தீரவும் பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு பொங்கல் படைத்தல், நெய்விளக்கேற்றுதல், சந்தனக் காப்பு சாத்துதல், குதிரை எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
600 ஆண்டிற்கு முன்பு சுயம்புவாக அம்மனும், சுவாமியும் காவல்தெய்வமாக இங்கு எழுந்தருளியிருந்தனர். இப்பகுதிமக்கள் தங்களை காக்கும் கடவுளுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்ய நினைத்து இக்கோயிலுக்கு திருப்பணி செய்து 52 ஆண்டிற்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தினர்
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இக்கோயிலில் அம்மன் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு.