|
அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் (விசுவேசர்) திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
ஆதிகம்பட்ட விஸ்வநாதர் (விசுவேசர்) |
|
அம்மன்/தாயார் | : |
ஆனந்தநிதி |
|
தீர்த்தம் | : |
தூமகேது தீர்த்தம் |
|
ஊர் | : |
கும்பகோணம் |
|
மாவட்டம் | : |
தஞ்சாவூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
மகாமக தினத்தன்று ஆதிகம்பட்ட விஸ்வநாதர் அம்பாளுடன் மகாமக குளத்திற்கு எழுந்தருள்கிறார். இதுதவிர, சிவனுக்குரிய அத்தனை விழாக்களும் இங்கு நடத்தப்படும். |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
நகை வியாபாரிகள், ஆசிரியர், மாணவர்கள் பிரார்த்தனை தலம். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 7 மணி முதல் 12மணி வரை, மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்,
கம்பட்ட விஸ்வநாத கீழவீதி,
கும்பகோணம். |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
கம்பட்டம் என்ற சொல்லுக்கு தங்கச்சாலை என்று பொருள். ஒரு காலத்தில் இந்த இடத்தில்தான் பொற்காசு அடிக்கும் நிலையங்கள் இருந்தன. தஞ்சையையும் பழையாரையும் தலைநகரங்களாக கொண்டு ஆண்டுவந்த சோழ மன்னர்கள் இந்த இடத்தில்தான் நாணயம் தயாரிக்கும் நிலையங்களை அமைத்தனர். தங்க காசுகள் இங்கு உருவாக்கப்பட்டன. இவ்வகையில் இதனை தமிழகத்தின் நாசிக் என்றுகூட செல்லப்பெயரிட்டுஅழைக்கிறார்கள்.
|
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
மாணவர்கள் மட்டுமின்றி, தங்க நகை தொழில் செய்பவர்களும் இவரை வணங்கி தொழில் மேன்மை பெறலாம். | |
|
| |
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
கும்பகோணம் ஒரு காலத்தில் மாலதிவனமாக இருந்தது. மாலதி என வழங்கப்படும் மரங்கள் அடர்ந்திருந்தன. உதயகிரியில் நிசாசரா என்ற தபஸ்வி வசித்தார். அவரது மகனான தூமகேது மிகப்பெரிய ஆசிரியர். பல கலைகளை கற்றவர். இவரிடம் பாடம் படிக்க வேண்டுமானால் மாணவர்கள் போட்டி போட்டு செல்வார்கள்.
தற்போது சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து மாணவர்கள் படிக்க செல்வதுபோல, அனைத்தும் அறிந்தவர் என்பதால் தூமகேதுவை சுற்றி மாணவர் கூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கும். அவர் என்ன சொன்னாலும் மாணவர்கள் அப்படியே கேட்பார்கள். இதன் காரணமாக படிப்பில் கவனம் அதிகமாகி கலைகளில் சிறந்து விளங்கினார்கள். மிகச்சிறப்பாக படிக்கும் மாணவர்களை தூமகேது சுற்றுலா அழைத்துச்செல்வார். சிவாலயங்களுக்கு செல்வது அவரது வழக்கம். அக்கோயிலின் அமைப்பு, தல வரலாறு, சிவ வழிபாட்டின் மகிமை ஆகியவற்றை செய்முறை விளக்கங்களுடன் கற்றுக்கொடுப்பது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு அவர் வந்த தலங்களில் ஒன்றே ஆதிகம்பட்ட விஸ்வநாத கோயிலாகும். இவரது ஆசிரிய பணியை மெச்சி இறைவனே அவருக்கு காட்சி கொடுத்தார். ஆனந்தமயமான அந்த காட்சியைக்கண்ட தூமகேது இறைவனுக்கு விசுவேசர் என்றும், அம்பாளுக்கு ஆனந்தநிதி என்றும் பெயர்சூட்டினார். அவ்விடத்தில் இருந்த தீர்த்தத்திற்கு தூமகேது தீர்த்தம் என்று இறைவன் பெயர்சூட்டினார். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
நகை வியாபாரிகள், ஆசிரியர், மாணவர்கள் பிரார்த்தனை தலம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|