கொற்றவன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் அவர் பெயரால் கொற்றவன் குடி என்பது மருவி கொத்தங்குடி என்றாகி யது. கருவை முட்புதற்கள் மண்டிய இடத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியில் இடம் வழங்கியதால் இருபது அம்ச நகர் என்றாகியது.
ஆடி மாதம் 15 நாள் திருவிழாவிற்கு பின் தீமிதி உற்சவம், மாதம் தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி வழிபாடு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல சிறப்பு:
இங்கு அம்மன் சுயம்புவாக உருவானவர்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு புற்றுமாரியம்மன், நாககாளியம்மன் திருக்கோயில்,
அண்ணாமலை நகர் அஞ்சல்,
இருபது அம்சநகர் கொத்தங்குடி,
சிதம்பரம் வட்டம்-608002.
கடலூர்
போன்:
+91 9003850026
பொது தகவல்:
கிழக்குப் பக்கம் வாயில், விமானத்தில் ஒரு கலசம், நுழைவு வாயில் முன் உள்ள மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். கொடிமரம், நந்தி, பலிபீடம் உள்ளது. இடபக்கம் சுப்ரமணியர், வலப்பக்கம் விநாயகர், தெற்கு பக்கம் பார்த்து தட்சிணாமூர்த்தி, வள்ளலார் மற்றும் பேச்சியம்மன் அருள்பாலிக்கின்றனர். வெளி பிரகாரத்தில் இடபக்கம் ஆஞ்சநேயர் நின்ற நிலையில் மேற்குப் பக்கம் பார்த்தும், சப்த கன்னிகள், அங்காளம்மன், கருமாரியம்மன், துர்கை, சமயபுரத்து அம்மன், திரவுபதி, கிருஷ்ணன், வடக்கு பக்கம் பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். கருவறைக்கும் பின் பக்கம் கீற்றுக் கொட்டகையில் துவக்கத்தில் உருவான புற்று சுமார் 10 அடி உயரத்தில் 40 ஆண்டுகளாக உள்ளது. புற்றுக்கும் கீழ் நாககாளியம்மன் அருள்பாலிக்கிறார். வலப்பக்கம் ஐயனார் கிழக்குப் பக்கம் பார்த்து அருள்பாலிக்கிறார். காவலாளி குதிரையுடன் நிற்கிறார். அனைத்தும் சுதையால் வடிவமைக்கப்பட்ட சிலைகளாக உள்ளன.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், திருமணத்தடை, தீராத நோய்களுக்கு சிறந்த கோயிலாக விளங்குவதால் பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும், சுதை சிற்பங்கள், ஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் உள்ளதால் பெருமைமிக்கதாக அமைந்துள்ளது. 40 ஆண்டுகள், 2001 மற்றும் 2015 இல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தல வரலாறு:
சிதம்பரம் அருகே பெருமாத்தூரில் வாழ்ந்த திருவேங்கடம் பிள்ளை வள்ளலார் பக்தர். இவர் மகள் மாதரசியும் தந்தையுடன் ஈடுபட்டு வள்ளலாரை வணங்கி வந்துள்ளார். திருமணம் வேண்டாம் என மறுத்தவரின் கனவில் ஒருவர் தோன்றி திருமணத்திற்குப் பின் அதிசயம் காண்பாய், அற்புதம் நிகழ்த்துவாய் என சொல்லி மறைந்தார். அதன் பின் 60 நாட்களில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. மாதரசி தந்தை குறிப்பிட்ட நாளில் தான் இறந்து விடுவாக கூறியவர் அப்படியே இறந்தார்.
திருமணம் முடிந்த 30 நாள் இரவு மீண்டும் அதே உருவம் மாதரசி கனவில் தோன்றி அதிசயத்தை காண்பிக்க அழைத்து சென்றார். தூக்கத்தில் இருந்து விழித்தவர்கள் மற்றும் கணவர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் முட்புதற்களை வெட்டிக்க கொண்டு நடு காட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு புற்று வடிவில் அம்மன் காட்சிக் கொடுத்தார். அதன் பின் கீற்றுக் கொட்டகையில் கோயில் கட்டினர். படிப்படியாக கோயில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 10 அடி உயரத்தில் புற்றும் வளர்ந்துள்ளது. தற்போது மாதரசி அம்மையார் கோயிலை பராமரித்து பாதுகாத்தும் அருள் வாக்கும் அளித்து வருகிறார். பல்வேறு பகுதியில் இருந்து குல தெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு அம்மன் சுயம்புவாக உருவானவர்.