Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுந்தரேஸ்வரர்
  உற்சவர்: வேடமூர்த்தி
  அம்மன்/தாயார்: சாந்தநாயகி, சவுந்தர நாயகி
  தல விருட்சம்: புன்னை
  தீர்த்தம்: தேவதீர்த்தம்
  ஆகமம்/பூஜை : காரணாகமம்
  புராண பெயர்: புன்னகவனம்
  ஊர்: திருவேட்டக்குடி
  மாவட்டம்: புதுச்சேரி
  மாநிலம்: புதுச்சேரி
 
பாடியவர்கள்:
     
 

திருஞானசம்மந்தர்

தேவாரப்பதிகம்

அருமறை நான்முகத்தானும் அகலிடம் நீரேற்றானும் இருவருமாய் அளப்பரிய எரியுருவாய் நீண்டபிரான் வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்பவளத் திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 49வது தலம்.

 
     
 திருவிழா:
     
  மாசிமகத்தில் 3 நாட்கள் விழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  வில் ஏந்திய வேலவர்: இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம். சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம். திருஞானசம்மந்தர் பதிகம் பாடிய சிவன், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் "புன்னைவனநாதராக' அருளுகிறார். இவரது சன்னதியின் முன்புறம் சனீஸ்வரர், சம்மந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி- 609 609. புதுச்சேரி.  
   
போன்:
   
  +91- 4368 - 265 693, 265 691, 98940 51753. 
    
 பொது தகவல்:
     
  பிரகாரத்தில் நடராஜர், சுப்பிரமணியர், பூரணா, புஷ்கலையுடன் ஐயப்பன் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  நல்ல நண்பர்கள் கிடைக்க, எதிரிகள் தொல்லை, ஆணவம் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

மாப்பிள்ளை சிவன்: ஒருசமயம் கைலாயத்தில் பார்வதிதேவி சிவனிடம், ""உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே!'' என்றாள். அம்பாளின் ஆணவத்தை அறிந்த சிவன், அவளை பூலோகத்தில் மீனவப்பெண்ணாக பிறக்கும்படி செய்துவிட்டார். அதன்படி அம்பாள் இத்தலத்தில் மீனவக்குழந்தையாக பிறந்தாள்.


சிவன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள். சிவனும், மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று "மாப்பிள்ளை அழைப்பு' கொடுக்கின்றனர். அப்போது, மீனவர்கள் சிவனை, "மாப்பிள்ளை!' என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் திருமண தோஷங்கள் நீங்கும், விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கை.


கோயில் அமைப்பு: சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. கருவறையில் சிவன், லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறார்.


விழாக்காலங்களில் இவருக்கும் பூஜைகள் நடக்கிறது. அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறாள். சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை, "சாந்தநாயகி' என அழைக்கின்றனர். பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்கள் இவளுக்கு வஸ்திரம் சாத்தி, பூஜைகள் செய்து வணங்குகின்றனர். திருஞானசம்மந்தர் காரைக்கால் செல்லும் முன்பு, இத்தலத்திற்கு கடல் வழியாக வந்தார். அவர் படகில் இருந்து இறங்க முயன்றபோது, கரையில் மணல்கள் எல்லாம் லிங்கமாக தெரிந்தது. எனவே, அவர் கடலில் நின்றே சுவாமி குறித்து பதிகம் பாடிவிட்டு சென்றுவிட்டாராம்.


சிவன், வேடன் வடிவில் வந்ததால் இவ்வூர் "வேட்டக்குடி' என்றும், அம்பாள், மீனவப்பெண்ணாக பிறந்த தலம் என்பதால், "அம்பிகாபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிநாயகர் சுந்தர விநாயகர் எனப்படுகிறார். இக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கூடியது.


 
     
  தல வரலாறு:
     
 

மகாபாரத போரின்போது பாண்டவர்கள், கவுரவர்கள் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். வேதவியாசர் அர்ஜுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனர் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக முகாசுரனை அனுப்பினார் துரியோதனர்.


பன்றி வடிவில் வந்த அசுரன் அவரது தவத்தை கலைக்க முயன்றான். அர்ஜுனர் அசுரனை அம்பால் வீழ்த்தினார். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச்செல்ல முயன்றார். அர்ஜுனர் அவரிடம் பன்றியை தர மறுத்தார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


அப்போது சிவன், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், ""ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா?'' என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், ""அர்ஜுனன் "மஸ்யரேகை' (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்,'' என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம்.


அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம். சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar