Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜர்
  உற்சவர்: தேவாதிராஜன்
  அம்மன்/தாயார்: பெருந்தேவி
  தல விருட்சம்: இலுப்பை
  தீர்த்தம்: சந்திரபுஷ்கரிணி
  புராண பெயர்: வேதபுரி
  ஊர்: புதுச்சேரி
  மாவட்டம்: புதுச்சேரி
  மாநிலம்: புதுச்சேரி
 
 திருவிழா:
     
  வைகாசி பிரம்மோற்சவம் - பெருமாளுக்கு தெப்போற்ஸவம் -தீர்த்தவாரி - 10 நாட்கள் திருவிழா - மிகவும் சிறப்பாக நடைபெறும். பவித்திர உற்ஸவம் - ஆவணி -5 நாட்கள் திருவிழா சித்திரை - ராம உற்ஸவம் - 25 நாட்கள் விழா ஆடிப்பூரம் - 10 நாட்கள் - ஆடி கஜேந்திர மோட்சம் மார்கழி - வைகுண்ட ஏகாதசி - பகல் பத்து ராப்பத்து விழா, தைமாதம் - தைப்பூசம் உற்ஸவம், மாசி மகம் - கடல் தீர்த்தவாரி - கோதண்ட ராமர் தெப்போற்ஸவம், பங்குனி உத்திரம் - தாயார் உற்ஸவம். புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளும் மிகவும் விசேஷமாக இருக்கும். புரட்டாசி நவராத்திரி உற்ஸவம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  ஆதிமூர்த்தி நரசிம்மன் தாருவால் (மரத்தால் ) ஆனவர் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் 82 ஊற்றுக் கண்கள் உள்ளன. நடுவில் 12 கிணறுகள் உள்ளன. அவற்றில் ஆறு தானாகவே தண்ணீரை வடித்துக் கொள்ளும். அதுவாகவே ஊறும். யாரும் ஊற்றுவதில்லை. இத்தண்ணீர் பச்சை நிறமாக இருப்பதற்கு காரணம் அப்ரகம் எனும் கந்தக அமிலம். இந்த அமிலம் இருப்பதை அறிவியலார்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த தீர்த்தத்தில் குளித்தால் ஜூரம், தலைவலி ஆகியவை எல்லாம் உடனே குணமாகி விடுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், புதுச்சேரி -605 001.  
   
போன்:
   
  +91-413-222 4340 
 
பிரார்த்தனை
    
  எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இத்தலத்து பெருமாளை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. சொத்து தகராறு உள்ளவர்கள் வழிபடுகிறார்கள்.

பிரச்சினைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இத்தலத்துக்கு வந்து மனமுருகி வணங்கிவிட்டுச் சென்றால் மனஸ்தாபங்கள் நீங்கி இருவரும் ஒன்றிணைகிறார்கள் என இத்தலத்து பக்தர்கள் கூறுகிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  உண்டியல் காணிக்கை, திருமஞ்சனம், சுவாமிக்கு பொருள் செய்து வைத்தல், துளசி மாலை சாத்துதல், நெய்தீபம் ஏற்றுதல் ஆகிவற்றை நேர்த்திகடன்களாக பக்தர்கள் செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  மூலவர் பெருமாள் பூமியிலிருந்து கிடைத்தவர். பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சுமார் 5 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கின்றார்.

ஓவியத்தில் எழுதவொண்ணா திருமுகமண்டலத்தை பெற்ற சிறப்பு பெற்ற பெருமாள்.

பக்தர்களை தன்பால் கவர்ந்திருக்கும் வசீகரப் புன்னகை நோற்றம் உள்ளவர்.

கடலூருக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான திருவஹீந்திரபுரத்திலுள்ள பெருமாள் கோயிலின் அபிமான தலம் இது. எனவே அங்கு பெருமாளுக்கு நடக்கும் அத்தனை விசேஷங்களும் இங்கும் செய்யப்படுகின்றன.

விசேஷ கண்ணாடி அறை உள்ளது. 108 திவ்ய தேசங்களிலும் உள்ள பெருமாளின் சுதை வடிவங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. இது வேறு எந்த கோயிலிலும் காண் முடியாத அரிய அம்சம்.

இங்குள்ள ராமர் சீதை லட்சுமணர் அனுமர் நவநீத கிருஷ்ணர், சந்தான கோபாலர் வேணுகோபாலர் சிலைகள் 1902ம் ஆண்டு வைந்தி குப்பம் எனும் இடத்தில் கிடைத்தவைகளாகும்..

சுந்தர ஆஞ்சநேயர் கடலூர் அழகாநந்த முதலியார் என்பவரது நிலத்திலிருந்து எடுக்கப்பட்டவர். நிகமாந்த ஸ்ரீ மகாதேசிக சுவாமியும், ஸ்ரீ மணவாள மாமுனிகளையும் ஒரு சேர இங்கு தரிசிக்கலாம்.

இங்கு தென்கலை வடகலை பேதம் கிடையாது.

ஸ்ரீ சுதர்சனமாகிய சக்கரமும் சங்கமாகிய ஸ்ரீ பாஞ்சஜன்யமும் பூரண கும்பத்தின் இரு பக்கங்களும் பொறித் துள்ளனர்.

இக்கோயிலின் மூலவரின் திருநாமமாகிய ஸ்ரீ வரதராஜபெருமாள் பெயரையே விமானத்திற்கிட்டு ஸ்ரீ வரதராஜ விமானம் என்றே அழைக்கப்படுவதும் ஒரு சிறப்பு என கூறலாம். இங்குள்ள வசந்த மண்டபம் முஸ்லிம் ஒருவரால் கட்டிக் கொடுத்ததாகும்.
 
     
  தல வரலாறு:
     
  இக்கோயில் முதலில் அரச மரங்களால் சூழப்பட்டு ஸ்ரீ நரசிங்கப் பெருமானை ஆராதனை மூர்தியாகக் கொண்ட ஒரு சிறிய கோயிலாக விளங்கிற்று. பின்னர் பல அடியார்களின் முயற்சியால் பெருங்கோயிலாயிற்று என்பது செவி வழிச் செய்தி ஆகும். தற்போது அந்த ஸ்ரீ நரசிங்கப் பெருமாள் விக்கிரகம் ஸ்ரீ வரதராஜபெருமாளின் சுற்றுப் பிரகாரத்தில் மேற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. புதுவையிலிருந்து ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயில் 8.9.1748 ஆம் ஆண்டு பிரஞ்சு வீரர்களால் அழிக்கப்பட்ட அதனை அறிந்த ஆனந்தரங்கபிள்ளை என்பவர் மனம்வருந்தி இடிபாடுகளுக்கு இடையே இருந்த விக்கிரகங்களையும் மற்ற பொருட்களையும் துணிந்து கைப்பற்றிப் புதுவை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலிலும் ஸ்ரீ காளகத்தீசுவரன் கோயிலிலும் வைத்து பாதுகாக்குமாறு ஆலோசனை கூறினார் என்று அவரது நாட்குறிப்பு கூறுகிறது. தென்னாட்டில் முஸ்லிம் படையெடுப்பின் போது ஏராளமான விக்கிரகங்கள் இக்கோயிலுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாம். இதிலிருந்தே அதன் தொன்மையை அறியலாம். இக்கோயிலின் பழைய அமைப்பு மணிமாடக் கோயில் அமைப்பினைச் சேர்ந்ததாகும் என்பர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஆதிமூர்த்தி நரசிம்மன் தாருவால் (மரத்தால் ) ஆனவர்
விஞ்ஞானம் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் 82 ஊற்றுக் கண்கள் உள்ளன. நடுவில் 12 கிணறுகள் உள்ளன. அவற்றில் ஆறு தானாகவே தண்ணீரை வடித்துக் கொள்ளும். அதுவாகவே ஊறும். யாரும் ஊற்றுவதில்லை. இத்தண்ணீர் பச்சை நிறமாக இருப்பதற்கு காரணம் அப்ரகம் எனும் கந்தக அமிலம். இந்த அமிலம் இருப்பதை அறிவியலார்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த தீர்த்தத்தில் குளித்தால் ஜூரம், தலைவலி ஆகியவை எல்லாம் உடனே குணமாகி விடுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar