தமிழ்த்தெய்வமான முருகன், உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற குழந்தை இலக்கியங்களை அளித்த தமிழ்மூதாட்டி அவ்வையார் ஆகியோருக்கு இங்கு சந்நிதிகள் இருப்பது சிறப்பம்சம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
வெற்றி விநாயகர், துர்க்கை, மகாவிஷ்ணு, முருகன், தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன.
பிரார்த்தனை
திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
அரவணைக்கும் அம்பிகை: உக்ரதெய்வமான இசக்கியம்மன் இங்கு சாந்த கோலத்தில் அமைதியாக காட்சியளிக்கிறாள். இடக்கையில் குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் இருப்பது அவளின் கருணை, வீரத்தை வெளிப்படுத்துகிறது. குழந்தையை கையால் அரவணைத்து காப்பதுபோல, தன்னை நாடிவரும் அன்பர்களை அரவணைத்து அருள்புரிகிறாள். நீதிதெய்வமாக இருந்து தர்மத்தை நிலைநாட்டுவதன் அடையாளமாக தலையில் நெருப்புக்கிரீடம் தாங்கியிருக்கிறாள். கன்னியாகுமரி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் மாதிரியிலும், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் உருவஅமைப்பிலும் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வரம் தருபவளாகவும், குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காப்பவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள்.
ஆடித்திருவிழா: இங்கு தமிழ்மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளியன்று மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். ஆடியில் மூன்றுநாட்கள் திருவிழா உண்டு.
தல வரலாறு:
தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி வழங்குவதாக கூறுவர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம். சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஓம்சக்திநகரில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் ஓம்சக்தி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தமிழ்த்தெய்வமான முருகன், உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற குழந்தை இலக்கியங்களை அளித்த தமிழ்மூதாட்டி அவ்வையார் ஆகியோருக்கு இங்கு சந்நிதிகள் இருப்பது சிறப்பம்சம்.
இருப்பிடம் : அம்பத்தூர் ஓ.டி.பஸ்ஸ்டாண்டில் இருந்து செங்குன்றம் (ரெட்ஹில்ஸ்) ரோட்டில் 3 கி.மீ., தூரத்தில் கள்ளிக்குப்பம். இங்கிருந்து பிரியும் ரோட்டில் ஒரு கி.மீ., தூரத்தில் ஓம்சக்திநகர்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
அம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
சென்னை
தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060