சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி, அருகம்புல் மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
கோயில் கட்டப்பட்ட காலத்தில் மூலவர் விநாயகப்பெருமான், தாமரை மலர் மேல் அமர்ந்து அருள்பாலித்தார். அவருக்கு முன்பு நந்தி இருந்தது. விநாயகப்பெருமானை சிவபெருமானாக வழிபட்டதால் நந்தி அமைக்கப்ட்டிருந்தது. தற்போது மூலவர் அருகில் ராகு, கேது, முன்புறம் மூஞ்சுறு அமையப்பெற்றுள்ளது. கோயில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சியும் இவர்கள் முன்பு நந்தியும், மறுபுறம் பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நவக்கிரகங்கள் அமையப்பெற்றுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கிழக்குமுக எல்லைக்கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. பசுமலை பகுதியிலுள்ள கோயில்களில் முளைப்பாரி விழாவின்போது, கரக அலங்காரம் இக்கோயிலில் நடக்கிறது.
தல வரலாறு:
1931ம் ஆண்டு கோயில் மண்டபம் கட்டப்பட்டது. 1984ல் ராஜகோபுரம் அமைத்து முதன்முதலாக மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 2006ல் இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ராகு,கேதுவுடன், விநாயகப் பெருமான் எழுந்தருளியிருப்பது சிறப்பு.