Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆதிவாலகுருநாதசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஆதிவாலகுருநாதசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆதிவாலகுருநாதசுவாமி
  உற்சவர்: அங்காள ஈஸ்வரி
  அம்மன்/தாயார்: அங்காளஈஸ்வரி
  தல விருட்சம்: வில்வ, நாகலிங்க மரம்
  புராண பெயர்: சோழன்வந்தான் (ஜனகை நகர்)
  ஊர்: சோழவந்தான்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாசிமகா சிவராத்திரி உற்சவம் 5 நாட்கள் நடக்கும். ஆடி மாதம் வெள்ளி தோறும் விளக்குபூஜை, தைப்பொங்கல், தீபாவளி பண்டிகை, ஆடி 18, நவராத்திரி, பவுர்ணமி பூஜை, பிரார்த்தனைகள் நடக்கும். குழந்தை வரம், திருமணம், குடும்ப சுகங்கள், வியாபார விருத்தி, சகல நன்மைகள் குறித்து பக்தர்கள் முடிகாணிக்கை, பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்தல் உட்பட பல நேத்திக்கடன் செலுத்தி அம்மனிடம் வரம் பெறுகின்றனர். முக்கியமான நாட்களில் வெள்ளிகவசம் சாத்தப்படுகிறது. ஒரு காலபூஜை நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள சிவனும் அம்பாளும் சுயம்புவாக தோன்றியவர்கள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 முதல் 11 வரை மாலை 5 முதல் 8.30 வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆதிவாலகுருநாதசுவாமி திருக்கோயில் சோழவந்தான், மேலரத வீதி, வாடிபட்டி வட்டம், மதுரை - 625214.  
   
போன்:
   
  +91 452 258578, 99944 27018 
    
 பொது தகவல்:
     
  கோயில் அலங்கார மகாமண்டபத்தில் பரிவார தெய்வங்களாக மாயாண்டிசுவாமி, வீரபத்திரசுவாமியும், இடதுபுரத்தில் முத்துபேச்சியம்மன், பேச்சியம்மாள், சப்பாணி, பெரியகருப்பணசுவாமி, மதுரைவீரன், சோணைசாமி, வீராயியம்மாள், நாகம்மாள், ராக்காயி, சந்தனகருப்பன், பாதாளஅம்மன் உட்பட தெய்வ சன்னதிகள் அமைந்துள்ளது.

சோழவந்தான் மேலரதவீதியில் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முன் கோபுரம் கிழக்கு பார்த்துள்ளது. முன் மண்டபத்தில் தூண்களும் மேல்புறம் அழகிய ஓவியங்களும் உள்ளன. கர்ப்பகிரஹத்தில் இடப்புறம் அம்மனும், வலப்புறம் முருகப்பெருமானும் காட்சி தருகின்றனர். இது தவிர 22 சுவாமி, அம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ளனர். கோயில் கோபுரத்தில் கடவுள் மற்றும் மனிதர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நந்தீஸ்வரர், சங்கிலி கருப்பு, லாடசன்னாசி, கொங்கையா பலிபீடம் அமைந்துள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

திருமண தடை நீங்க சிறப்பு வழிபாடு, திருவிளக்கு வழிபாடு, கேட்டவர்க்கு கேட்ட வரம் தரும் அம்மன் குழந்தை பாக்கியம் முன்னோர் சாபம் நீக்குதல்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். மாசி சிவராத்திரியை முன்னிட்டு கிடா வெட்டுதல், முடிகாணிக்கை செலுத்துதல், அன்னதானம், கோயிலுக்கு தேவையான நன்கொடை வழங்குதல். 
    
 தலபெருமை:
     
  கோயில் சன்னதியில் சுயம்புவாக அன்னை பராசக்தி அங்காளஈஸ்வரியம்மன், ஆதிவாலகுருநாதசுவாமி மூலவராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். அனைத்து சமுதாயத்தினரும் வழிபடும் குலதெய்வமாக இக்கோயில் விளங்குகிறது.

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் மூன்று நாட்கள் தங்கி வழிபட்டல், முடி இறக்குதல் பிள்ளைமார், முதலியார், மீனவர், கவுண்டர் உட்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் 500 ஆண்டுகளுக்கு மேல் வழிபடுகின்றன.
 
     
  தல வரலாறு:
     
  300 ஆண்டிற்கு முன்பு வைகை ஆற்றில் வந்த வெள்ளத்தில் மிதந்த பெட்டியை தூக்கி அதிலிருந்த சுவாமி விக்ரகங்கள்தான், இங்கு சுயம்புவாக அருள்பாலிக்கிறது.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. பெட்டியைப் பார்த்த ஒரு சமூகத்தினர் பெட்டி தங்களுக்கு சொந்தம் என்றும், மற்றொரு சமூகத்தினர் பெட்டிக்குள் உள்ள பொருட்கள் தங்களுக்கு சொந்தம் என்றனர். அங்கு மீன்பிடித்த சிலர் பெட்டியை தூக்கி வந்து ஒரு இடத்தில் வைத்தனர். (தற்போது கோயில் உள்ள இடம்) பெட்டியை திறந்து பார்த்த போது அதில் 21 சுவாமி, அம்மன் சிலைகள் (செம்பு) இருந்தன என கூறப்படுகிறது. அன்று முதல் இப்பகுதியில் வழிபாடு துவங்கியது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சிவனும் அம்பாளும் சுயம்புவாக தோன்றியவர்கள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar