Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பழநியாண்டீஸ்வரர்
  ஊர்: சீர்காழி
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தைப்பூசம், மாத கார்த்திகை, கந்த சஷ்டி, சித்ரா பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  முருகன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. பழநியாண்டவரான பழநியாண்டீஸ்வரரின் கையில் தண்டத்துக்குப் பதில் வேல் இருப்பது சிறப்பு  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில் ஆமப்பள்ளம் - 609115 சீர்காழி தாலுக்கா நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 98430 65530, 94428 32665 
    
 பொது தகவல்:
     
  மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் நடுவே மயிலும் பீடமும் உள்ளன. துவார பாலகிகள் கொலுவிருக்க அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் முருகன் நின்ற திருக்கோலத்தில் பழநியாண்டீஸ்வரராக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலய திருச்சுற்றில்  விநாயகர், சிவன், பார்வதி இடும்பன், நாகர் சன்னதிஉள்ளன. ஆலயத்தில் எதிரே திருக்குளம் உள்ளது. ஆலயத்தில் தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  குடும்பத்தில் மனத்துயரங்கள் தீர இங்குள்ள முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். இக்கோயிலில் திருமணம், வீடுகட்டுவதற்கான தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண் டியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் முருகனுக்கு பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.இத்தலத்தில் திருமண தடை நீங்க பெண்கள் 11 கார்திகை விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டு சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் துணி தானமளித்தால் உடன் திருமணமாகும் என கூறப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  பல குடும்பங்களுக்கு இந்த முருகன் குல தெய்வம், எனவே அவரை தரிசிக்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் இங்கு வருவது வாடிக்கை.  
     
  தல வரலாறு:
     
  பழநி முருகன் நம் ஊரில் இருந்தால், நாம் நினைத்த நேரத்தில் அவரை தரிசித்து அருள் பெறலாமே என்ற எண்ணம் ஒரு நாள் அவர் மனதில் தோன்றியது. வெல்வந்தரான அவர் ஒரு முடிவோடு பழநி சென்று தங்கி, சிலை வடிக்கச் செய்தார். சிலை உருவானது. அசப்பில் பழநி முருகன் போலவே சிலை அமைந்தது கண்டு மகிழ்ந்த அந்த பக்தர், சிலையை தன் ஊரான ஆமப்பள்ளம் என்ற ஊருக்குக் கொண்டு வந்தார். தனது சொத்துகளை விற்று முருகனுக்கு ஓர் அழகிய ஆலயம் கட்டி, அதில் சிலையை பிரதிஷ்டை செய்தார். ஊர் மக்களும் அவருக்கு உதவி செய்தனர். முருகன் அன்றிலிருந்து பழநியாண்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஆமப்பள்ளத்தில் அருள்புரியலானார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: முருகன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. பழநியாண்டவரான பழநியாண்டீஸ்வரரின் கையில் தண்டத்துக்குப் பதில் வேல் இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar