ஸ்தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. மரத்தின் கீழ் நாகர் மற்றும் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரகாரத்தில் நந்தியுடன் சிவன் சன்னதி, துளசிமடம் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
தொழில் விருத்தியடைதல், நோய் விலகி, குடும்ப ஆரோக்கியம், கல்வி, தேர்வுகளில் வெற்றி, திருமண அனுகூலம், புத்திர பாக்கியம் கிட்டும், நல்ல காரியங்கள் நடக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சனிக்கிழமை ஆஞ்சநேயர்க்கு உகந்தநாள் என்பதால் அன்று வடமாலை சாத்துதல், சந்தனகாப்பு அலங்காரம் செய்தல், நெய்விளக்கேற்றுதல், 108 முறை ஸ்ரீராமஜெயம் ஒப்பித்தல் போன்றவற்றை செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஒரு கால பூஜை நடக்கிறது. வியாழன், சனி கிழமைகளில் வழிபடுவது, தொடர்ந்து 11 வாரம் சனி கிழமைகளில் பொங்கல் வைத்து, வெற்றிலை மாலை, துளசிமாலை, வடமாலை சாத்தி, வாழைப்பழம் தீபம் ஏற்றினால் சுப காரியங்கள் நிறைவேறும், நாகதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் பால், மஞ்சள், குங்குமம் சாத்தி விநாயகரை வழிபட்டால் தீய சக்திகள் அகன்றுவிடும். 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதிய பேப்பர் மாலை ஆஞ்சநேயருக்கு அணிவித்தால் சிரஞ்சீவியாகலாம் என்றார்.
தல வரலாறு:
சுயம்புவாக ஜெயவீர ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. , அபயகஸ்த ஆஞ்சநேயராக அருள்பாலித்து காவல் தெய்வமாக காட்சியளிக்கிறார்.