ஆண்டு தோறும் ஆவணி 25 முதல் 5 நாட்கள் சூரிய ஒளி அம்மன் மேல் படுவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை,மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை (விசேஷ நாட்களில் மாறுபடும்)
முகவரி:
அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில்,
முத்து மாரியம்மன் கோவில் தெரு,
வெளிப்பாளையம், நாகப்பட்டினம்-611001.
போன்:
+91 9943506865, 8056933889
பொது தகவல்:
நுழைவு வாயிலில் மூன்று நிலை ராஜகோபுரம், கொடிமரம்,பலிபீடம், பிரகாரம்,மகாமண்டபம்,அர்த்த மண்டபம், கற்பகிரகம் மற்றும் வலது புறத்தில் சித்தி விநாயகர்,இடது புறத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஈசானி மூலையில் நவக்கிரகங்கள், வடக்கில் விஷ்ணு துர்க்கை, காத்தவராயன் சாமி,பிடாரி,சேஷ்ட மூலையில் தெட்சிணாமூர்த்தி, வாயு மூலையில் ஐயப்பன், பெரியாச்சி, நாகராஜர், கொடிமர விநாயகர் ஆகிய சுவாமிகள் தனி,தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர்.மேல்புறத்தில் வசந்த மண்டபம்,விழா மண்டபம்,நான்கு பிரகார மண்டபம்,கோசாலை,நந்தவனம் உள்ளது
பிரார்த்தனை
நவக்கிரகதோஷம் விலகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில், நாகையில் முதலாவது மாரியம்மன் கோவில்,மாரியம்மன் கோவில்களில் இக்கோவிலுக்கு மட்டுமே நான்கு மாட வீதிகள் உள்ளது.
தல வரலாறு:
தஞ்சையை ஆட்சி செய்த சோழர்கள்,தங்களின் ஆட்சியில் துறைமுகப்பட்டினமாகவும்,வியாபார நிமித்தமாக வெளிநாட்டவர் வந்து செல்லும் முக்கிய வியாபார தலமாகவும்,நாகர் பட்டினம் என்றழைக்கப்பட்ட நாகையை மிக முக்கிய பாதுகாப்பு பகுதியாக கருதினர். இதையடுத்து நாகை பகுதிக்கு தனி அதிகாரியை நியமித்து,அதிகளவில் படை வீரர்களை தங்க வைத்தனர்.
நாகையையொட்டி வெளிப்பகுதியில் தனது அரசாங்க ஊழியர்களுக்காக குடியிருப்புகளை கட்டி அப்பகுதியை வெளி பாளையம் என்றழைத்தனர். தனது ஆளுகையின் கீழ் இருந்த அரசாங்க ஊழியர்களின் வழிபாட்டுக்காக நாகைக்கு முதல் கோவிலாக,கருங்கற்களால் வேயப்பட்ட மாரியம்மன் கோவிலை அமைத்தனர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலே நாகையில் சோழர்களால் கட்டப்பட்ட முதல் கோவில் என்று கூறப்படுகிறது.
சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் காப்பு கட்டி உற்சவம் நடந்தப் பிறகே நாகை பகுதியில் உள்ள மற்ற கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த நடைமுறைகள் மாறியுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஆண்டு தோறும் ஆவணி 25 முதல் 5 நாட்கள் சூரிய ஒளி அம்மன் மேல் படுவது சிறப்பு.