Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சங்கரலிங்கம் சுவாமி, சங்கரநாராயணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சங்கரலிங்கம் சுவாமி, சங்கரநாராயணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சங்கரலிங்கம் சுவாமி, சங்கரநாராயணர்
  உற்சவர்: சங்கரலிங்கம் சுவாமி, சங்கரநாராயணர்
  அம்மன்/தாயார்: கோமதி அம்மன்
  தல விருட்சம்: ஆல மரம்
  தீர்த்தம்: நூபுர கங்கை - சோலமலை தீர்த்தம்
  ஊர்: தும்பைப்பட்டி
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  1. மஹா சிவராத்திரி 2. மாதந்தோறும் வரும் பிரதோஷ கால பூஜைகள் 3. மாதந்தோறும் வரும் அருள்மிகு கால பைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் 4. வருடாபிஷேக பூஜை 5. ஆடித்தபசு 6. கிருஷ்ண ஜெயந்தி விழா 7. நவராத்திரி விழா (10 நாட்கள்) 8. சரஸ்வதி, விஜயதசமி பூஜை 9. கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேக விழா 10. மார்கழி மாத பொங்கல் விழா 11. மஹா கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றுதல் 12. ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேக விழா 13. திருவாசகம் முற்றோதுதல் விழா 14. மார்கழி மாத முழுதும் பொங்கல் விழா 15. நாக பஞ்சமி பூஜை  
     
 தல சிறப்பு:
     
  நாகராஜ பாம்பு ” கோவிலில் இன்றும் வலம் வருகிறார். சுவாமியிடம் கவுளி (பல்லி) உத்தரவு பெற்று செல்லலாம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை. மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு கோமதி அம்பிகா சமேத சங்கரலிங்கம் சுவாமி, சங்கரநாராயணர் திருக்கோவில், சிவாலயபுரம், தும்பைப்பட்டி, மதுரை  
   
போன்:
   
  +91 96264 10103, 99621 43332, 86080 74205, 83445 55525 
    
 பொது தகவல்:
     
  கோவில் அமைப்பு:

இந்தக் கோவிலின் முக்கியப் பிரார்த்தனைகள் / நேர்த்திக்கடன்
1.பிரம்மகத்தி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகார பூஜை
பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணிக்குள் சிறப்பு பரிகார ஹோமம் அபிஷேகம் செய்ய வேண்டும்.
21 பிரதிஷணம் வந்தால் பிரம்மகத்தி தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற்று சுhவாமியின் அருள் கிடைக்கும்.
2.திருமணத் தடை நீங்க !
இத்திருக்கோவிலில் உள்ள மஹா விஷ்ணுவிற்கு சிறப்பு பூஜை செய்தால், விரைவில் விவாஹம் நடைபெறும்.  பிரதி மாதம் அமாவாஸை அன்று 11 முறை,  துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

3.சந்தான பாக்கியம் கிடைத்திட !
இத்திருக்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மனுக்கு பௌர்ணமி அன்று ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்து 21 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.  தொடர்ந்து 21 முறை வழிபாட்டினை செய்ய வேண்டும்.


 
     
 
பிரார்த்தனை
    
  1.பிரம்மகத்தி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகார பூஜை
பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணிக்குள் சிறப்பு பரிகார ஹோமம் அபிஷேகம் செய்ய வேண்டும்.
21 பிரதிஷணம் வந்தால் பிரம்மகத்தி தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற்று சுhவாமியின் அருள் கிடைக்கும்.
2.திருமணத் தடை நீங்க !
இத்திருக்கோவிலில் உள்ள மஹா விஷ்ணுவிற்கு சிறப்பு பூஜை செய்தால், விரைவில் விவாஹம் நடைபெறும்.  பிரதி மாதம் அமாவாஸை அன்று 11 முறை,  துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

3.சந்தான பாக்கியம் கிடைத்திட !
இத்திருக்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மனுக்கு பௌர்ணமி அன்று ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்து 21 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.  தொடர்ந்து 21 முறை வழிபாட்டினை செய்ய வேண்டும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  4.ஆலயம்: அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமி, அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி, அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பாள் திருக்கோவில், சிவாலயபுரத்தில் சுவாமிகள் மூவரும் கிழக்கு முகமாக, கிழக்கு நோக்கி உள்ளனர். கோவில் ஸ்தல விருட்சம் : ஆல மரம். சுவாமியிடம், கவுளி உத்தரவு பெற்று செல்லலாம். 5.கோமதி அம்மன் அம்மய் நோய் உள்ளவர்கள் இங்கு வந்து அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து, கோவிலில் உள்ள தீர்த்தம் பெற்று சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் இறங்கி குணம் பெறலாம். 6.சங்கரலிங்கம் சுவாமிக்கு தொழிலில் லாபம் கிடைக்கவும், தொழில் சிறப்பாக நடைபெறவும் பசும்பால் அபிஷேகம் 48 நாட்களும், நெய் அபிஷேகம் 4 நாட்களும் செய்தால் தொழில் சிறந்தோங்கும். 7.நாக தோஷம் நிவர்த்தி பெற: நாகதோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக இங்கு வந்து அபிஷேகம் செய்து வந்தால் தோஷ நிவாரணம் பெறலாம். 8.பித்துரு தோஷம் நீங்க: பித்ரு தோஷம் உள்ளவர்கள் தர்ப்பணம் செய்த பிறகு, அனைத்து வித காய்கறிகள், அன்னதானம், கோதானம் செய்து நிவர்த்தி பெறலாம். 9.இத்திருக்கோவிலில் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் பரிகார பூஜை செய்து நிவர்த்தி பெறலாம். 10.இத்திருக்கோவிலில் அனைத்து விதமான பரிகார பூஜைகள் செய்து தரப்படும். 
    
 தலபெருமை:
     
  வேண்டி வழிபட்டு உத்தரவு கேட்டால் அங்கு பல்லி (கவுளி) உத்தரவு கிடைப்பது சிறப்பாகும். அவர்களே தற்போது சங்கரநாராயணர் கல்வி மற்றும் அன்னதான அறக்கட்டளையை நிறுவி, சுற்றுப்பட்டு 18 கிராமத்தினரும்,   வந்து வணங்கிச் செல்லும் பொருட்டு,  அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்கோவிலின் அன்றாட பூஜைகள், மற்றும் திருவிழாக்களை வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

 
     
  தல வரலாறு:
     
  இத்திருக்கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு (ஐந்து அல்லது ஆறு தலைமுறைகளுக்கு முன்பாக) முன் தெற்கே திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் ஊரிலிருந்து, இருந்து பிழைப்புத் தேடி தும்பைப்பட்டி கிராமத்திற்கு வந்து தங்கியிருந்த சங்கரன் என்பவர், ஸ்தல விருட்சமாகிய ஆலமரத்தில் ஆதிசிவனாகவே எழுந்தருளி அருள்பாலிக்கிறார்,  என்று  நம்பப்படுகிறது.  
        
இவருக்கு ஏழு குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திருமணம் செய்யாமல்.  பிரம்மச்சாரியாகவே “ பட்டவர் ” என்ற பெயருடன் வாழ்ந்து வந்ததாகவும், வில் எய்துவதில் மிகக் கெட்டிக்காரரான இவர், மேலூர் சுற்றுப்பட்டு 18 பட்டி கிராமத்திலும், விவசாயப்பயிரை மேய்ந்து பயிரைத் தின்று தீர்க்கும் விலங்குகளை வேட்டையாடும், காவல் பணியைச் சிறப்பாகச் செய்து வந்திருக்கிறார். மற்ற ஆறு வாரிசுகளின் 100-க்கும் மேற்பட்டவர்கள்,  தும்பைப்பட்டி, கச்சிராயன்பட்டி, கோட்டப்பட்டி, மேலூர், சென்னகரம்பட்டி, எட்டிமங்கலம், சுக்காம்பட்டி ஆகிய ஏழு கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
    
இத்திருக்கோவில் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் நாளன்று, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல தேசிக அடிகளார், மானாமதுரை சுவாமிகளின் அருளாசியுடன்  கும்பாபிஷேகம் நடைபெற்றது.    கோவில் கும்பாபிஷேகத்திற்காக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அருள்மிகு சங்கரன் கோவிலில் சென்று பிடிமண் எடுத்து வந்து இக்கோவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏழுபேர் திருக்கோவில் திருப்பணிக்குழுவினர் சென்று திருமண் எடுக்கச் சென்று திரும்பி வந்து சிலைகளை பிரதிஷ்டை செய்யும் தருவாயில், அங்கிருந்த அனைவரும் வியப்படையும்  வகையில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.  திருமண்ணில் எடுத்து வந்த பையில் ஒரு வெள்ளியினாலான நாகராஜா சிலை ஒன்று இருந்தது.  அச்சிலை எந்த ஒரு குறைபாடுமின்றி புதிதாக செய்து வைத்தாற்போல் திருமண் எடுத்து வந்த பைக்குள் இருந்தது.   
    
இங்குள்ள ஆல மரத்தில் வேறெங்கும் காண முடியாத பிரமிடு அமைப்புகள் உள்ளது சிறப்பாகும். அங்கு அமர்ந்து தியானம் செய்து, தமக்குள்ள மன வேதனைகளை இறைவனிடம் சொல்லி வழிபட்டுச் சென்றால் நிச்சயமாக நல்லது நடக்கும், நினைத்த காரியங்கள் கை கூடும் என்பது உண்மை வேண்டி வழிபட்டு உத்தரவு கேட்டால் அங்கு பல்லி (கவுளி) உத்தரவு கிடைப்பது சிறப்பாகும்.
அவர்களே தற்போது சங்கரநாராயணர் கல்வி மற்றும் அன்னதான அறக்கட்டளையை நிறுவி, சுற்றுப்பட்டு 18 கிராமத்தினரும்,   வந்து வணங்கிச் செல்லும் பொருட்டு,  அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்கோவிலின் அன்றாட பூஜைகள், மற்றும் திருவிழாக்களை வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வேண்டி வழிபட்டு உத்தரவு கேட்டால் அங்கு பல்லி (கவுளி) உத்தரவு கிடைப்பது சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar