Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஏகாம்பரேஸ்வரர்
  உற்சவர்: சந்திரசேகரர்
  அம்மன்/தாயார்: காமாட்சி
  தீர்த்தம்: அனுமன் தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவாகமம்
  ஊர்: மானந்தகுடி
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ராபவுர்ணமி, அனுமன்ஜெயந்தி, ஆடி வெள்ளி, திருக்கார்த்திகை.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு ஒவ்வொரு நவகிரகமும் தங்களது மனைவியருடன் காட்சி தருகின்றனர். அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர்களுக்கென தனித்தனியே திருவாட்சியும் உள்ளது விசேஷம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தபுரி - 609 503, திருவாரூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4366 239389 
    
 பொது தகவல்:
     
 
பிரகாரத்தில் வலம்புரி கற்பக விநாயகர், மகாலட்சுமி மற்றும் மாரியம்மனுக்கு தனிச்சன்னதிகள் உள்ளது. அனுமன் தனிசன்னதியில் அருள்பாலிக்கிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
 
தெரியாமல் தவறு செய்து வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தியும், விசேஷ பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  ஆஞ்சநேயருக்கு காட்சி தந்த சிவன், ஏகாம்பரேஸ்வரராக அருளுகிறார். அம்பிகை காமாட்சி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறாள். இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவரை, "மங்கள ஆஞ்சநேயர்' என்றே அழைக்கிறார்கள். அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இங்குள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், சப்த ரிஷிகளும் இருக்கின்றனர். நந்தியும் இருக்கிறது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.

தம்பதி சமேத நவக்கிரகம்: ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர், கிரகங்களை தனது வாலில் கட்டியிருப்பதாக ஐதீகம். இவரது நேரடிப்பார்வையில் கிரகங்கள் குடும்பஸ்த நிலையில் இருப்பதால் இங்கு கிரக தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. ஜாதக, கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.

நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலைகள் வைத்து வேண்டுகின்றனர்.

பொதுவாக சிவன் கருவறை கோஷ்டத்தின் பின்பகுதியில் லிங்கோத்பவர்தான் இருப்பார். ஆனால், இங்கு இடும்பன் இருக்கிறார்.

இவருக்கு நேரே சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.  இவர் வலது காலை முன்புறமாக வைத்து, முருகனுக்கு சேவை செய்வதற்கு தயாராக இடும்பன் இங்கு இருப்பதாக ஐதீகம்.

 
     
  தல வரலாறு:
     
  கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் அவனது பூஜைக்கு தொந்தரவு செய்தார். இதனால் கோபமடைந்த கார்த்தவீரியன், ஆஞ்சநேயரை சபித்து விட்டான். தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவன் அவருக்கு அம்பிகையுடன் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தருளினார்.அந்த மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார் ஆஞ்சநேயர். எனவே இத்தலம் "அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் "மானந்தகுடி' என்று மருவியது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஒவ்வொரு நவகிரகமும் தங்களது மனைவியருடன் காட்சி தருகின்றனர். அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர்களுக்கென தனித்தனியே திருவாட்சியும் உள்ளது விசேஷம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar