இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் மணி 12.30 வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராஜதுர்க்கை திருக்கோயில்
திருமஞ்சன வீதி
திருவாரூர் மாவட்டம்.
பொது தகவல்:
பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, மகம் நட்சத்திரக்காரர்கள்; ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அனைவருக்கும் யோகாதிபதியாக விளங்குகிறாள் இந்த ராஜ துர்க்கை.
பிரார்த்தனை
அனைத்து யோகங்களும் விரைவிலேயே கிடைக்க, தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடை நீங்க இங்குள்ள துர்கையை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இந்த நட்சத்திர, ராசிகளில் பிறந்தவர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்து, சிவப்பு மலரினால் மாலை அணிவித்து புடவை சாற்றி, பசு வெண்ணெயால் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
பொதுவாக ஆலயங்களில், துர்க்கையை வடக்கு பிராகார கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஆனால் இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருளாட்சி புரிகிறாள். சங்கு, சக்கரம், கத்தி, சூலம் ஆகியவற்றை நான்கு கரங்களில் ஏந்தி, தலையில் சந்திர கலையை தரித்தவண்ணம் சாந்த சொரூபிணியாகக் காட்சி தரும் ராஜதுர்க்கையின் ஆற்றல் அளவிடற்கரியது. ராமபிரான் இலங்கைக்கு ராவணனை வதம் செய்யப் புறப்படும் முன் இவ்வன்னையை பக்தியோடும், பாசத்தோடும் வழிபட்டுச் சென்று அவனை வெற்றி கொண்டதாக மகாகவி காளிதாசர் எழுதிய ரகுவம்ச காவியத்தின் மூலம் அறிய முடிகிறது.
தல வரலாறு:
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாகவும்; இச்சை, கிரியை, ஞானம் ஆகிய மூன்று சக்திகள் ஒருங்கே அமையப் பெற்ற சக்தியாகவும்; வேதம் ஆகமம், புராணம் ஆகியவற்றில் வெற்றி என்ற நாமத்திற்கு பொருளுடையவளாகவும் விளங்குபவள் ஜெய துர்க்கா. இப்படி எங்கும் எதிலும் எந்நிலையிலும் வெற்றியைத் தரக்கூடிய ஜெயதுர்க்கா தேவியானவள், ராஜதுர்க்கை என்ற திருநாமத்துடன் இங்கு அருள்பாலிக்கிறாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு கருவறையில் சிம்மவாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.