பதிவு செய்த நாள்
19
நவ
2019
02:11
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், கார்த்திகை முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு, முதல் சோமவார சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று (நவம்., 18ல்) அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜை, காலை 6:00 மணிக்கு உற்சவர் சோமஸ்கந்தர் திருப்பள்ளியெழுச்சி, 7:00 மணிக்கு முதற்கால பூஜையும், பகல் 11:00 மணிக்கு அம்பாள் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
பகல் 12.00 மணிக்கு கலசஸ்தாபனம், 1008 வலம்புரி சங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 3:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு 1008 வலம்புரி சங்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் தங்க நாகாபரணத்திலும், அம்பாள் பெரியநாயகி வெள்ளி அங்கியில் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 8:00 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் டாக்டர்கள் செங்களப்பன், பிரசன்னா, சந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.