சிங்கம்புணரி : சிங்கம்புணரி செல்வவிநாயகர் கோயில் தெரு ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு படி பூஜை நடைபெற்றது.காலை 9:00 மணிக்கு ஹோமத்துடன் யாக பூஜை நடந்தது. மாலை 7:00 மணிக்கு கோயில் உள்ள 18 படிகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப் பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.