கன்னிவாடி:தருமத்துப்பட்டி அருகே காரமடையில் ராமலிங்கசுவாமி கோயில் உள்ளது. தைப் பூசம், பங்குனி உத்திர பாதயாத்திரை, கோடை காலங்களில் சேவை நோக்குடன் தண்ணீர் பந்தல், அன்னதான விழா நடக்கும். ஆண்டுதோறும் கார்த்திகை மாத உத்திரம் நட்சத்திரத்தில் குருபூஜை நடப்பது வழக்கம்.நேற்று (நவம்., 22ல்) குருபூஜையை முன்னிட்டு தீர்த்தாபிஷேகம், விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.