Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள் நேசத்திற்கு உரியவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்யாண பசுபதீஸ்வரருக்கு தாலி காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2019
02:11

நீண்ட நாளாக திருமணம் நடக்காத பெண்களும்,  உடல்நிலை சரியில்லாத  கணவர் உயிர் பிழைக்கவும் தாலியை காணிக்கையாக அளிக்கும் வழிபாடு கரூர்  கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடக்கிறது. படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவுக்கு ஒருமுறை கர்வம் ஏற்பட்டது.  தன்னால் தான் உலகமே இயங்குகிறது என நினைத்தார். இவரது கர்வத்தை  அடக்க சிவபெருமான் முடிவெடுத்தார். தேவலோக பசுவான காமதேனுவிடம் நீ  பூலோகத்திலுள்ள வஞ்சி வனத்திற்கு சென்று சிவபூஜை செய். அதன் பலனாக  பரிசு ஒன்றைத் தருவேன் என்றார். வஞ்சி வனத்தில் காமதேனு தவத்தில்  ஈடுபட்டது.

அங்குள்ள புற்று ஒன்றில் சுயம்புலிங்கம் (தானாக தோன்றியது) மறைந்திருந்தது.  அதன் மீது காமதேனு தினமும் பால் சொரிந்தது. ஒருநாள் தவறுதலாக அதன்  குளம்படி பட்டு லிங்கத்திலிருந்து ரத்தம் வழிந்தது. நடுங்கிப் போன காமதேனு   மன்னிப்பு கேட்க, அந்த லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டார் சிவன். நான்  உனக்கு வாக்களித்தபடி பரிசு தருகிறேன். உயிர்கள் பிறக்க ஆதாரமான கருவை  நீயும் இன்று முதல் உற்பத்தி செய்வாய். பிரம்மாவைப் போல் நீயும் இன்னொரு  படைப்புக்கடவுள் என்றார். காமதேனு மகிழ்ச்சியுடன் பணியில் ஈடுபட்டது.  தனக்கு போட்டியாக ஒருவர் வந்தவுடன்  பிரம்மாவின் கர்வம் அழிந்தது.
காமதேனு கருவைப் படைத்த இடம் என்பதால் வஞ்சிவனம் கருவூர் எனப்  பெயர் பெற்று, பின் கரூர் என மாறியது.  லிங்கம் இருந்த இடத்தில்  பிற்காலத்தில் கோயில் எழுந்தது. பசு வழிபட்ட சிவன் என்பதாலும், திருமண  பாக்கியம் தருவதாலும் சுவாமிக்கு கல்யாண பசுபதீஸ்வரர் என பெயர்  ஏற்பட்டது. பின்னாளில்  அலங்காரவல்லியமமனுக்கு சன்னதி எழுப்பப்பட்டது.

திருமணத்தடையுள்ள பெண்கள், மணமான ஒரு மாதத்துக்குள் கணவர் தங்களுக்கு  கட்டிய தாலியை இங்கு காணிக்கையாக அளிக்கின்றனர். இதே போல நோய்,  விபத்தால் உயிருக்கு போராடும் கணவரைக் காக்கவும் நேர்த்திக்கடன்  செய்கின்றனர்.

* எப்படி செல்வது?
திருச்சியில் இருந்து 83 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar