பதிவு செய்த நாள்
26
நவ
2019
03:11
*சேவை செய்வதை ஒரு வீடாகக் கருதினால், அதன் சுற்றுச்சுவராக உதவியும், மேற்கூரையாக தெய்வத் தன்மையும், வீட்டு உரிமையாளராக ஞானமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் அடித்தளமாக மனம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வீட்டினால் பயன்ஏதுமில்லை
*இறைவன்,ஒவ்வொருவரிடமும்அமைதியின் மூலமாகவே பேசிக்கொள்கிறார். ஆகவே, அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
*கடுமையாகஉழைப்பவர்களுக்கு அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும்
*கடவுள், உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்தைப்போல இருக்கிறார்
*கடவுள் எப்போதும் உங்களுடனே இருக்கிறார். அவர் உங்களைச் சுற்றியோ, அருகிலோ, பக்கவாட்டிலோ இருக்கிறார்
*இல்லாதவர்களுக்கு உதவி செய்வதே, மிகச்சிறந்தநற்செயல்.
*அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான வழியைச் சொல்லித் தருவதே நல்ல கல்வி.
*உங்களது மனதில் பக்திப்பூர்வமான எண்ணங்கள் வளரும் நாளே, எனது உண்மையான பிறந்த நாள்.
*கடவுள் உங்களுக்கு மிக அருகில், நீங்கள் சொல்வதைக் கேட்கக்கூடிய தூரத்தில்தான் இருக்கிறார்.
*மனிதர்கள் குற்றங்களில்இருந்து முழுமையாகவிடுபடுதலே, கடவுள் விரும்பும் பிரதான காணிக்கை.
*கடவுள் ஒருவரே; அவர் ஒருவரைத் தவிர நிச்சயமாக வேறு எவருமில்லை. மனதில் கடவுளைத் தியானித்திருப்பதே, உண்மையான சாதனை.
*ஒழுக்கமே, மனிதர்களுக்கு பாவம் அல்லது புண்ணியத்தை தருவதாக இருக்கிறது.
*ஆர்வத்துடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி நிச்சயம்.
*அன்புடன் இந்த நாளைத் துவங்கு; அன்பால் இந்த நாளை நிரப்பு; அன்புடன் இந்த நாளை செலவழி;அன்புடன் இந்த நாளை நிறைவு செய். நீ இருக்குமிடத்தில் அன்பு அலை பாயட்டும். ஊரெங்கும் சந்தோஷம்பெருகட்டும்.
*குணநலன் சரியில்லாதகணவரைக் கண்டு கலங்காதீர்கள். அவர் மீது அன்பு செலுத்துவதே, அவரை திருத்துவதற்கான முதல் வழி ஆகும். அன்பு செலுத்தப்படும் இடத்தில் கடவுளின்ஆசிர்வாதமும் கிடைத்துவிடும்.
*அன்பிற்கு மொழி கிடையாது. மொழிகள் புரியாத இடத்தில் அன்பினால் அனைத்தையும் சாதிக்கலாம்.
*துன்பங்களை சந்தித்தவர் களால் மட்டுமே, பிறரது துன்பங்களை அறிந்து கொண்டு, அவர்கள் மீது கருணை செலுத்த முடியும்.
*கடவுள் மீது பக்தி கொண்ட உலகம், பக்தி செலுத்தாத உலகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது.
*யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பேசுவதைவிட, வெளிப்படையாக பேசுவதே மேலானது.
*ஓய்வும், தூக்கமும் மனிதர்களுக்கு அவசியம். ஆனால், அதையும் அளவாகவே வைத்துக்கொள்ள வேண்டும்
*மகிழ்ச்சி துன்பங்களை போக்கும் மாமருந்தாக இருக்கிறது.
*பால், பழம், விதைகள் போன்ற உணவைச்சாப்பிடுங்கள். அதுவே நல்ல சிந்தனைகளைத் தரும்.
-சாய்பாபா