ஒருமுறை, மாணவர்கள் விடுதி ஒன்றில் பாபா தங்கியிருந்தார். தன் நேரத்தையெல்லாம் அவர்களுக்காகவே செலவழித்தார். நன்றாகப் படிக்கும்படி அறிவுரை கூறினார். மாணவர்களும் அவர் சொன்னதை கருத்துடன் கேட்டனர். ஓரிரு நாள் கழிந்ததும் பாபா, “நாளை காலை நான் புட்டபர்த்திக்கு புறப்படுகிறேன்” என்றார். இதைக் கேட்டதும் மாணவர்களின் முகம் வாடியது. “சுவாமி! தயவு செய்து நீங்கள் இங்கேயே இருங்கள். நாங்கள் உங்கள் அறிவுரையைத் தொடர்ந்துகேட்க ஆவலாய் இருக்கிறோம்,” என்று ஒருமித்த குரலில் கூறினர். மறுநாள் காலையில் பாபாவின் கார் தயாரானது. மாணவர்கள் வருத்தத்துடன் நின்றனர். சிறிதுநேரத்தில் கார் கிளம்பியது. சற்று நேரம் தான் கழிந்திருக்கும்! விடுதி வாசலில் கார் சத்தம் கேட்டது. பாபா காரிலிருந்து இறங்கி விடுதிக்குள் வந்து கொண்டிருந்தார். தங்களின்அன்புக்கு கட்டுப்பட்டபாபாவைக் கண்ட மாணவர்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.