சென்னை: சீன அதிபர் வந்து சென்றதை அடுத்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் சீன நாட்டு பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலை சிற்பங்களை உள் வெளிநாட்டுப் பயணியர் கண்டு மகிழ்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஸீ ஜின்பிங் அக்டோபரில் மாமல்லபுரத்தில் சந்தித்து இங்குள்ள சிற்பங்களை ரசித்தனர். வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்கள் முன் புகைப்படம் எடுத்தனர்.
இந்த சந்திப்பால் தமிழக – சீன நாட்டின் பழங்கால கடல்வழி வர்த்தகம் மற்றும் கலாசார தொடர்பை சீனா உட்பட உலக நாட்டினர் அறிந்தனர். சீன அதிபர் வந்து சென்றதால் சீன பயணியர் தமிழகம் வர விரும்பி அடுத்தடுத்து மாமல்லபுரத்தில் குவிகின்றனர்.
கடந்த 21ம் தேதி சீனாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் மாமல்லபுரம் வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினமும் (நவம்., 25ல்) ஒரு குழுவினர் வந்தனர். இவர்கள் பிரதமர் – சீன அதிபர் கண்ட சிற்பங்களை பார்த்த சீன குழுவினர் அவற்றின் முன் நின்று குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.சீன குழுவில் வந்த பெண் ஒருவர் தமிழக பாரம்பரிய உடையான சேலையை விரும்பி அணிந்து பாரம்பரிய சிற்ப பகுதிகளில் வலம் வந்தார்.