வேதாரண்யம்: வேதாரண்யம் ராஜாளி காட்டிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை மாத சிவராத்திரியையொட்டி கப்பரை திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. வேதாரணீயஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பின்னர், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவில் கோவில் வளாகத்தில் கப்பரை சட்டி ஏந்தி அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாட்டை கோவில் நிர்வாகி ராஜகோபால், செயலாளர் வெற்றிச்செல்வன், கிராமத்தலைவர்கள் கபாட் மோகன், மாதவன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.