கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் படுக சமுதாயம் மக்களின் குலதெய்வமான ஹெத்தைம்மன் திருவிழா, அடுத்த மாதம் நடக்கிறது. விழாவுக்காக பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக, ஜெகதளா சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள, ஆறு கிராம மக்கள் , பாரம்பரிய கலாசார உடை அணிந்து, மடித்தொரை சுத்தக்கல் பகுதியில், அரவட்டை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்கள் நடை பயணமாக கொடுமுடி கிராமத்திற்கு சென்றனர். அங்கு, கத்திகை எனப்படும் அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். நாளை மறுநாள், (7ம் தேதி) சக்கலாத்தி என்ற பண்டிகையை முன்னிட்டி, படுகர் கிராமங்களில், ஹெத்தையம்மன் பக்தர்களின் விரதம் துவங்க உள்ளது.