பதிவு செய்த நாள்
10
டிச
2019
12:12
குளித்தலை: அய்யர்மலை, ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் நான்காம் சோம வார விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதத்தையொட்டி சோமவாரவிழா நடைபெறுவது வழக்கம். முதல் திங்களன்று முதல் சோமவாரமும், தொடர்ந்து நான்கு திங்களும் நான்கு சோமவாரமும் வெகு சிறப்பாக நடந்துள்ளது. நேற்று காலை நான்காவது சோமவாரவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் செங்குத்தாக உள்ள, 1,017 படிகள் கொண்ட மலையின் உச்சிக்கு சென்று, ரெத்தினகிரீஸ்வரரை தரிசித்து சென்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை, கோவில் நிர்வாகம் வெகுவிமரிசையாக செய்திருந்தது. வரும் திங்கள் கடைசி சோமவாரம் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.