மேச்சேரி: சேலம் மாவட்டம், மேச்சேரி பசுபதீஸ்வரர் சமேத சவுந்தர நாயகி அம்மன் கோவிலில் இன்று, 43ம் ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு, இன்று காலை சிறப்பு அபி?ஷகம், அன்னாபி?ஷகம் நடக்கிறது. மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ராஜா, ஆய்வாளர் மணிமாலா, பசுபதீஸ்வரர் இறைப்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.