பதிவு செய்த நாள்
12
டிச
2019
03:12
சென்னை : சி.பி.ராமசாமி அய்யர் இந்தியவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடக்க உள்ள கருத்தரங்கத்திற்கு, தமிழ் கல்வெட்டுகளில் அறிவியல் தொழில்நுட்பம் என்ற தலைப்பில், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஆழ்வார் பேட்டையில் இயங்கி வரும், சி.பி.ராமசாமி அய்யர் இந்தியவியல் ஆராய் ச்சி நிறுவனத்தில், அடுத்தாண்டு, பிப்., 7 மற்றும் 8ம் தேதிகளில், சிறப்பு கருத்தரங் கத்தை நடத்த உள்ளது. இதில், கி.பி., 600 முதல், 1400 வரை, தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள, அறிவியல் தொழில் நுட்பங்கள் சார்ந்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட உள்ளன.
இதில் பங்கேற்கவும், கட்டுரை சமர்ப்பிக்கவும், இம்மாதம், 25ம் தேதிக்குள், cpriirconference@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவிக்கும்படி, அந்நிறுவனம் தெரிவித் துள்ளது. விவசாயம், நீர்மேலாண்மை, கைவினைப் பொருட்கள், ஆபரணங்கள், விவசாய பொறியியல், மருத்துவம், சுற்றுச்சூழல், அளவைகள் சார்ந்த கணிதம், உலோகவியல், வானி யல், போக்குவரத்து உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம்.மேலும் தகவல் களுக்கு, 94441 54939 என்ற, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.