சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சித்திரை பெருந்திருவிழா நாளை துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2012 11:04
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மிகவும் புகழ்பெற்ற புண்ணிய தலமான சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நாளை (24ம் தேதி) பூச்சொரிதலுடன் சித்திரை பெருந்திருவிழா துவங்குகிறது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நாளை (24ம் தேதி) பூச்சொரிதலுடன் விழா துவங்குகிறது. வரும் மே ஒன்றாம் தேதி இரவு காப்புகட்டுதலுடன் விழா துவங்குகிறது. வரும் இரண்டாம் தேதி சந்தி மறித்தல் விழாவும், மூன்றாம் தேதி குடியழைத்தல் விழாவும் நடக்கிறது. பின்னர் தினமும் அன்னம், சிம்மம், ரிஷபம், யானை, வெள்ளி போன்ற வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கிறார். முக்கிய விழாவான திருத்தேரோட்டம் வரும் 10ம் தேதி காலை 9 மணி முதல் 10.30க்குள் நடக்கிறது. 11ம் தேதி ஊஞ்சல் வழிபாடும், 12ம் தேதி விடையாற்றி நிகழ்வும், 14ம் தேதி ஸ்வாமி மலை ஏறுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் தங்கமுத்து, செயல் அலுவலர் சூரியநாராயணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.