பதிவு செய்த நாள்
23
ஏப்
2012
11:04
உடன்குடி : உடன்குடி அருகே தாண்டவன்காடு ஆதிநாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா இன்று (23ம் தேதி) கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. வரும் 25ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. தாண்டவன்காடு ஆதிநாராயணசுவாமி (இராஜாங்கோயில்) அப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலில் புதிய கோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடக்கிறது. இந்த விழா இன்று காலை 4 மணிக்கு அனுக்ஞை தேவதா அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி பூஜையுடன் துவங்குகிறது. காலை 9 மணிக்கு நவக்கிரஹ சாந்தி பூஜை, ஹோமம், குபேர லஷ்மி பூஜை ஹோமம், கோபூஜை, தனபூஜை, சுமங்கலிபூஜை, கன்யாபூஜை, திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி பூஜையும், மாலை 5 மணிக்கு தீர்த்த சங்கரஹணம், கங்கை அழைப்பு, தீர்த்தம் எடுத்து யானை மீது பவனி வருதல், மிருத் சங்கரஹணம், வாஸ்து சாந்தி பிரவேச பலி, திக்பலி பூஜை, அங்குரார்பண பூஜை, பாலிகா ஸ்தாபனம், ஆச்சார்யரக்ஷா பந்தனம், வஸ்த்ர மரியாதை செய்தல், கும்ப அலங்காரம், கலாஹர்ஷணம், கும்பம் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை துவக்கமும், வேதிகார்ச்சனை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், ஹோமம், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு பக்தி பட்டிமன்றமும், நாளை (24ம் தேதி) காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை துவக்கமும், ஆச்சார்ய விசேஷ சந்திபூஜை, பாவனா அபிஷேகம், பஞ்சகவ்யபூஜை, பூதசுத்தி ஆலய பிரதஷ்ணம், வேதிகார்ச்சனை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், ஹோமம், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இரவு 8 மணிக்கு சமயசொற்பொழிவும், இரவு 10 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் சுக்கிரஹோரையில் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் யந்த்ரஸ்தாபனம், ரத்னந்யாசம், அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல், வரும் 25ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எழுந்தருளி விமான கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து மஹாகணபதி, மூலஸ்தானம் ஆதிநாராயண சுவாமி, குருநாதசுவாமி, பத்திரகாளி அம்பாள், குலசேகரராஜா, குலசேகரவள்ளி, ஐயன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். பகல் 11 மணிக்கு சகல திரவ்யங்களால் மஹாஅபிஷேகமும், பகல் 11.45 மணிக்கு மஹேஸ்வர பூஜையும், மாலை 5 மணி திருக்கல்யாணம், மாலை 6 மணிக்கு சகாப்ரநாமார்ச்சனையும், மாலை 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், புஷ்பாஞ்சலி அலங்கார பூஜையும், இரவு 8 மணிக்கு ஆதிநாராயணசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி தெரு வீதி உலாவும், இரவு 4 மணிக்கு திரைப்பட கச்சேரியும், வரும் 26ம் தேதி மண்டல பூஜை துவங்கி ஜூன் 12ம் தேதி முடிவடைகிறது. ஏற்பாடுகளை ஆதிநாராயணசுவாமி கோயில் மஹாகும்பாபிஷேக திருப்பணிக்குழு மற்றும் தாண்டவன்காடு ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.