மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திருவெம்பாவை ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை போட்டிகள் ஜன.,3ல் நடக்கிறது. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அன்று காலை 10:00 முதல் 11:00 மணி வரை திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் 1–5ம் வகுப்பு படிப்போர் பங்கேற்கலாம். காலை 11:00 முதல் பகல் 12:30 மணி வரை ‘வாழ்வினை வளம் கொழிக்கச் செய்யும் பாவை நோன்பு’ எனும் தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டியில் 6,7,8 ம் வகுப்பு படிப்போரும், மாலை 4:00 முதல் இரவு 7:30 மணி வரை ‘பாவை பகரும் இயற்கையும், இறைமையும்’ எனும் தலைப்பில் 9,10, பிளஸ் 1, பிளஸ் 2 படிப்போரும் பங்கேற்கலாம். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.