Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க கவசத்தில் ஜொலித்த அய்யப்ப ... மார்கழி வழிபாடு; வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை மார்கழி வழிபாடு; வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் நாச்சியார் கோவிலில் கல் கருட சேவை; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பகோணம் நாச்சியார் கோவிலில் கல் கருட சேவை; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

27 டிச
2025
10:12

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 சோழ நாட்டு திருப்பதிகளில் 14வது திருப்பதியாகவும் விளங்கும், வஞ்சுளவல்லி உடனுறை சீனிவாசப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.


இக்கோவிலில் உலகப்புகழ் பெற்ற கல்கருட சேவை மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் மிகவும் சிறப்பாக நடக்கிறது. அதன்படி கடந்த 23ம்தேதி முக்கோடி தெப்பத்திருவிழா எனும் மார்கழிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவாக சுவாமி எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று மாலை, கருடாழ்வார் சன்னதியில் இருந்து கல்கருட பகவானை 4 பக்தர்கள் துாக்கி வர, பின்னர் 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என்று படிப்படியாக மொத்தம் 128 பேர் கல் கருட பகவானை தோளில் சுமந்துக்கொண்டு வாகன மண்டபத்தில் எழுந்தருள கல் கருடசேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கருடாழ்வாரை சேவை சாதித்தனர். பிறகு சீனிவாசப்பெருமாள் கல்கருட வாகனத்திலும், வஞ்சுளவல்லி தாயார் வெள்ளி அன்னப்பட்சி வாகனத்தில் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar