குமாரபாளையத்தில் மார்கழி உற்சவ பஜனை குழுவினர் திருவீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2019 02:12
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மார்கழி உற்சவ பஜனை குழுவினர் திருவீதி உலா நடந் தது. குமாரபாளையம் அருகே, சங்கமேஸ்வரர் கோவில் திருமுறைக்கழகம் சார்பில், மார்கழி உற்சவ பஜனை குழுவினரின் திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று 19ம் தேதி, அவர்களின் திருவீதி உலா துவங்கியது. முன்னதாக சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. கோவிலில் வளாகத்தில் துவங்கிய இந்த திருவீதி உலா, சேலம் சாலை, மேட்டூர் சாலை, ஈரோடு சாலை தேர்வீதி, அக்ரஹாரம் உள்ளிட்ட பல முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.