பதிவு செய்த நாள்
20
டிச
2019
02:12
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், மார்கழி மஹோத்சவ திருவிழா நேற்று முன்தினம் 18ம் தேதி துவங்கியது. 15 நாட்கள் நடக்கும் இவ் விழாவில், தினமும் காலை, 6:30 மணி முதல், 12:00 மணி வரை ஸ்ரீமத் பாகவத மூல பாராயண மும், மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, ஸ்ரீமத் பாகவத உபன்யாஸமும் நடக் கிறது.
வரும், 24 காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை கிருஷ்ண மந்தர ஹோமம், 25 காலை, 5:00 மணிக்கு, ஸ்ரீமத் அனுமந் ஜெயந்தி சிறப்பு அபிஷேகம், வடை மாலை சாற்றுதல், மஹா தீபாராதனை நடக்கிறது. வரும் ஜன., 6 காலை, 4:00 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி சொற்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும், 7 காலை, 5:00 மணிக்கு துவாதசி உற்சவம், அபிஷேகம், தீபாராதனை, சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுத்தலைவர் உதய குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.