காளஹஸ்தியில் கண்ணபர் மலையிலிருந்து வடக்கே பார்த்தால் எதிரே துர்காதேவி கோயில் கொண்டிருக்கும் கனகாசலமும், சற்றே கிழக்காகப் பார்த்தால் முருகப்பெரு மான் எழுந்தருளியிருக்கும் குகக்குன்றும் உள்ளது. அனைத்துவிதமான வித்தைகளையும் ஒரு மலையாக்கி, அதன் மீது வித்தைகளுக்கெல்லாம் அதிபதியான முருகனை வீற்றிரு க்கச் செய்தார் சிவபெருமான். இப்படி ஞானவித்யா பீடத்தில் வீற்றிருக்கும் இந்த முரு கனை வழிபடுபவர்களுக்கு சகல ஞானமும் கிட்டும். வடக்கே துர்கை, தெற்கே காளத்தீஸ்வரர், நடுவில் முருகன் என்று இந்த மூன்று மலைகளுமே சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகின்றன.