ராமபிரான் வைகுண்டம் புறப்பட்ட போது அனுமனையும் அழைத்தார்.ஆனால், வைகுண்டத்தில் உங்களை வணங்க கோயில்கள் இருக்காது. ராமநாமம் ஒலிக்காது. நான் பூலோகத்தில் இருக்கிறேன் என பிரியாவிடை கொடுத்து, பூமியில் சிரஞ்சீவியாக நம்முடன் இருக்கிறார் என்பது சத்தியம். ராம நாமம் சொல்லி அனுமனை வணங்கினால், தீய சக்திகள் நெருங்காது. புத்தி, பலம், புகழ், தைரியம், ஆரோக்கியம், வீரம் உட்பட அனைத்தும் கிடைக்கும்.