இயேசு மாட்டுக் கொட்டிலில் பிறந்தது நம் எல்லாருக்கும் தெரியும். புனிதர் ஒருவரும் மாட்டுக்கொட்டிலில் பிறந்த கதை தெரியுமா!இத்தாலியைச் சேர்ந்த பட்டு வியாபாரி ஒருவர் தன் குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றிருந்தார். கர்ப்பவதியான அவரது மனைவிக்கு பிரசவ வலி வந்து விட்டது. அவர் வேதனையில் துடித்தார். குழந்தை பிறக்கிற வழியைக் காணோம். அப்போது, ஒரு பெரியவர், “நீங்கள் இந்தப் பெண்ணை ஒரு மாட்டுக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். குழந்தை பிறந்து விடும்” என்றார். அதன்படி மாட்டுக்கொட்டிலுக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை யார் தெரியுமா? புனித பிரான்சிஸ் அசிசியார்.