வால்பாறை:வால்பாறை, சோலையாறு எஸ்டேட் ராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு இரண்டாம் டிவிஷன் ராமர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை நடந்தது.விழாவில், நேற்று முன் தினம் காலை, ஆஞ்சநேயருக்கு வெற்றி, வடை, துளசி, எலுமிச்சை மாலை சாற்றப்பட்டது. சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.சிறப்பு பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொாண்டனர்.