Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வக்ரகாளியம்மன் கோவிலுக்கு 1008 ... கம்பளி சுவாமி மடத்தில் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொம்பாக்கத்தில் அனுமன் ஜெயந்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2019
12:12

 புதுச்சேரி:கொம்பாக்கத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, 21 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நேற்று நடந்தது. முதலியார்பேட்டை அடுத்த கொம்பாக்கத்தில் அலர்மேல்மங்கா சமேத வேங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 21 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.

விழாவை முன்னிட்டு, செங்கழுநீரம்மன் கோவிலில் இருந்து பால் குடம் ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வேங்கடாசலபதி கோவிலுக்கு வந்தனர். அங்கு, ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது.பின், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வடை மாலை சார்த்தி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் உற்சவர் வீதியுலா, மாலையில் 108 தீப திருவிழா நடந்தது.ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் புருஷோத்தமன், செயலாளர் கிருஷ்ணராஜன், பொருளாளர் முருகையன், உறுப்பினர் வரதராஜீ மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar