பதிவு செய்த நாள்
31
டிச
2019
10:12
வடபழநி : புத்தாண்டு தினத்தன்று, வடபழநி முருகனை தரிசனம் செய்ய ஏதுவாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், புத்தாண்டு நாளில், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், முருகனை தரிசிக்க வருகை தருவர்.நாளை புத்தாண்டு பிறப்பதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக, முருகனை தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யவும், கோவில் நிர்வாகம்சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.காலை, 4:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, தங்க நாணய கவச அலங்காரமும், மதியம், 1:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, தங்க கவச அலங்காரமும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரமும் நடைபெறவுள்ளன.
சிறப்பு வழி தரிசனமும், இலவச பொது வழி தரிசனமும் செய்ய, கோவிலின் தெற்கு ராஜகோபுரம் வாயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இங்கு, 50 மற்றும் 100 ரூபாய், சிறப்பு வழி தரிசனசீட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மேலும், தெற்கு நுழைவாயில் டிக்கெட் கவுன்டர் அருகே, இலவச காலணி பாதுகாப்பிடமும், தெப்பக்குளம் வடக்கு பகுதியில், இருசக்கர வாகன நிறுத்தமும், வள்ளி திருமண மண்டபம் எதிரில், கார்கள் நிறுத்தவும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.