கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டி வெள்ளகோவிலில் சுமங்கலி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2019 12:12
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் கணவர் நீண்ட ஆயுள் பெற வேண்டி இந்து அன்னையர் முன்னணி நடத்தும் முதலாமாண்டு 108 சுமங்கலிகள் பூஜை நேற்று தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது.
பூஜையை குத்து விளக்கேற்றி சுசி சம்பத், சுதாகணேஷ், ஹிந்து வழக்கறிஞர் முன்னணி மாநிலச் செயலாளர் செல்வமணி சதீஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்து அன்னையர் முன்னணி திருப்பூர் கிளை,மாவட்ட தலைவி லோகநாயகிதுரைசாமி, மாநில செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் பேசினார்.பூஜையை இந்து அன்னையர் முன்னணி மாவட்டச் செயலாளர் சாவித்திரி நடத்தி வைத்தார். சுமங்கலி பூஜையில் ஆஷ்ட லட்சுமியின் அருள் பெற்று, கணவர் நீண்ட ஆயுள் பெற, குடும்பத்தில் என்றும் அமைதி நிலவ, குழந்தைச் செல்வங்கள் கல்வி கற்று சீரோடும் சிறப்போடும் வாழ பதினாறு செல்வங்களையும் பெற சுமங்கலி பூஜை சிறப்பாக நடந்தது இப்போது 160 சுமங்கலிகள் கலந்துகொண்டனர். குழந்தைகள் விளக்கேற்றி 16 பேர் கலந்து கொண்டனர். சுமங்கலி பூஜைக்கான ஏற்பாடுகளை வெள்ளகோவில் இந்த முன்னணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.