பதிவு செய்த நாள்
31
டிச
2019
12:12
கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில், 400 ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையான விநாயகர், மாரியம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, தமிழ் ஆகமவிதிப்படி, சமீபத்தில் கும்பாபிேஷகம் நடந்தது.
பழங்காலத்தில், கோவில் கட்டப்பட்டதற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், இருந்த எழுத்துக்கள் மறைந்து விட்டதால், கல்வெட்டு பதிக்கப்படவில்லை.கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவில் கருவரையில், மூன்றரை அடி உயர அருள் விநாயகர் அருள்பாலிக்கிறார். தினமும் காலை, 6:00 முதல் 9:00 மணி வரையிலும், மாலை, 6:00 முதல், 9:00 மணி வரையிலும் இரண்டு கால பூஜை நடக்கிறது.விநாயகரின் வலது மற்றும் இடது கைகளில், அங்குசம், யானைக்கொம்பு கொண்டுள்ளார். ஆணவம், தன்னலம் உள்ளிட்ட மாயைகளை அழித்து, அன்பெனும் பாசக்கயிற்றின் மூலம் பக்தர்களை தன்வசம் ஈர்த்து அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு எதிரில் பலிபீடத்தில், மூஷிக வாகனம் அமர்ந்தபடி உள்ளது. மழையில்லாத காலங்களில், மழை வேண்டி, விநாயகரை நீருக்குள் மூழ்கடிக்க மக்கள் நீர் ஊற்றி வழிபடுவர். பவுர்ணமி பூஜை, ஆவணி சதுர்த்தி பெருவிழா, விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழில், திருமறை, தேவாரம், திருவாசகப்பாடல்கள், அகவல் பாராயணம் பாடி வழிபாடு நடக்கிறது.பக்தர்கள் பூ கேட்பதும், அருள் பெறுவதும் இங்கு தினமும் நடக்கிறது. கோவில் வளாகத்தில், அமைந்துள்ள மற்றொரு சன்னதியில், வடக்கு நோக்கி அமர்ந்து மாரியம்மன் அருள் பாலிக்கிறாள்.