புத்தாண்டு வழிபாடு: கூடலூர் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2020 03:01
கூடலூர்: கூடலூர் கோவில்களில், புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூடலூர் பகுதியில் நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டை இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கிறிஸ்தவ தேவாலயங்களில் இரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு, காலை கூடலூர் விநாயகர் கோவில், முனீஸ்வரன் கோவில், குஸ்மகிரி முருகன் கோவில், மேல்கூடலூர் மாரியம்மன் கோவில், நந்தட்டி சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராள மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதேபோன்று, சிறு நகரங்கள், கிராமப் பகுதிகள் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.