பாரியூர் குண்டம் விழா ஈரோடு: கோபி அருகே, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வரும், 8ல் துவங்குகிறது. இதை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில், பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்குகிறது. வரும், 8 முதல், 12 வரை சத்தி, கோபி, கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல், பவானி, அந்தியூர் பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்.